For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்க போன ராசா.. தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க.. அனிதா உருக்கம்!

  |

  சென்னை: தனது மறைவு குறித்து பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார்.

  சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடிய அனிதா தனித்துவமான போட்டியாளராகவும் இருந்து வந்தார்.

  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அனிதா. இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததே சந்தோஷம்தான் என்று கூறினார்.

  உங்கள நெடுஞ்சாலை படத்துல பார்த்திருக்கேன்.. வந்த வேகத்தில் ஆரி பக்கம் சாய்ந்த சுனிதா.. காண்டான கேபி!

  ரயிலில் மரணம்

  ரயிலில் மரணம்

  அனிதா வெளியே வருவதற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை அவரது அப்பா சம்பத், தனது மகனுடன் ஷீரடி சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பிய அவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரில் ரயிலிலேயே மரணமடைந்தார்.

  பெரும் சோகம்

  பெரும் சோகம்

  மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்ததார். அதன் பிறகு பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அனிதா அப்பாவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

  நேரில் அஞ்சலி

  நேரில் அஞ்சலி

  அனிதாவின் அப்பா உடலுக்கு பிக்பாஸ் பிரபலங்களான, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதாவிற்கும் அவர்கள் ஆறுதல் கூறினர்.

  அப்பாவை பார்க்கவில்லை

  அப்பாவை பார்க்கவில்லை

  அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக குவாரண்டைனில் இருந்த போதுதான் தனது அப்பாவை கடைசியாக சந்தித்து பேசியுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் சம்பத் ஷீரடி புறப்பட்டு சென்றதால், அப்பாவை அனிதா பார்க்கவில்லை. சிக்னல் கிடைக்காததால் போனிலும் பேசவில்லை.

  முன்னாடியே வந்திருந்தா..

  முன்னாடியே வந்திருந்தா..

  மகளை மீண்டும் பார்க்கும் முன்பாகவே அனிதாவின் அப்பா மரணமடைந்துவிட்டார். தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு முன்னாடியே அப்பா கூட கொஞ்ச நாள் இருந்திருப்பேன் என உருக்கமாக பதிவிட்டிருந்தார் அனிதா சம்பத்.

  கடைசி செல்பி..

  இந்நிலையில் தனது அப்பாவின் மரணம் குறித்து ரொம்பவே உருக்கமான ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் குவாரண்டைனுக்கு செல்லும் முன்பாக தனது அப்பா மற்றும் அம்மாவுடன் எடுத்த செல்பியை தனது டிவிட்டர் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  அப்பானா எனக்கு உயிரு..

  அப்பானா எனக்கு உயிரு..

  மேலும், அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்.. பிக்பாஸ் குவாரண்டைன் போகும்போது எடுத்தது.. அப்பானா எனக்கு உயிரு.. எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்.. எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி..

  எங்க போன ராசா..

  எங்க போன ராசா..

  ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்.. உன்ன வழியிலயே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இருப்பேன்.. நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப.. Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல.. வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது.. எங்க போன ராசா... என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  சோகத்துல காசு பாக்காதீங்க..

  சோகத்துல காசு பாக்காதீங்க..

  மேலும் டியர் யூடியூப் சேனல்ஸ்.. இதை என் ஃபாலோயர்ஸ்கிட்ட தான் எக்ஸ்பிரஸ் பண்றேன்.. இதை வீடியோவா பண்ணி வேற மாதிரி தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க ப்ளீஸ் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் அனிதா சம்பத்.

  நான் காயப்பட்டிருக்கிறேன்..

  நான் காயப்பட்டிருக்கிறேன்..

  என் வலியை புரிந்து கொள்ளுங்கள்.. நான் ரொம்பவே காயப்பட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தினர் அந்த கமெண்ட்ஸ்களை பார்ப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அனிதா சம்பத் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  English summary
  Anitha Sampath heartfelt insta post about her father goes viral on social media. She missing her father so much, says guiltiness wont leave me.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X