»   »  விமலின் 'அஞ்சல'யை குடும்பத்துடன் பாருங்க.. சிபாரிசு செய்யும் ரசிகர்கள்

விமலின் 'அஞ்சல'யை குடும்பத்துடன் பாருங்க.. சிபாரிசு செய்யும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விமல், நந்திதா, பசுபதி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அஞ்சல. தங்கம் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தை திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார்.

டீக்கடை தான் படத்தின் கதைக்களம் என்பதால் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் என்று மொத்தம் 14 நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் தலைகாட்டி செல்கின்றனர்.


மஞ்சப்பைக்குப் பின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் படங்கள் இல்லாத விமலை இந்த அஞ்சல காப்பாற்றுமா? பார்க்கலாம்.


குடும்பத்துடன்

அஞ்சல மிகவும் நாகரீகமான ஒரு படம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் நீங்கள் திரையரங்கு சென்றால் உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இந்தப் படத்தை பார்த்து மகிழலாம்" என்று ரஜினி பிரவீன் தெரிவித்திருக்கிறார்.


அஞ்சல - பொழுதுபோக்கு

"அஞ்சல நல்ல ஒரு பொழுதுபோக்கு படம்" என்று பாராட்டியிருக்கிறார் பூஜா.


நகைச்சுவை கலந்த

"அஞ்சல ஒரு சிறந்த படம் என்று உணரவைக்கிறது. நகைச்சுவையுடன், உணர்ச்சிகரமான முடிவை கலந்து அளித்திருக்கின்றனர். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்" என்று உணர்வுபூர்வமாக பாராட்டி இருக்கிறார் விக்கி.


நீ எப்போ வந்தாலும்

"அஞ்சல படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. உன் கண்களே நிறைய பேசிவிடுகின்றன. நீ எப்போ வந்தாலும் எல்லோரும் தியேட்டர்ல கை தட்றாங்க" என்று நந்திதாவின் நடிப்பை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் விஜய் பாஸ்கர்.


மொத்தத்தில் 'அஞ்சல' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த முடிவு பாக்ஸ் ஆபீஸிலும் எதிரொலிக்குமா? பார்க்கலாம்.
English summary
Vimal, Pasupathy and Nandita starrer 'Anjala' Today Released Worldwide, written and directed by Thangam Saravanan - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil