நாயட்டு தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் நடிகை அஞ்சலி?

சென்னை : பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி படத்திலும் நடிகை அஞ்சலி நடித்திருந்தார்.

இந்தி,தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிங்க் ரீமேக் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது அதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி F3ல் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நாயட்டு தெலுங்கு ரீமேக்கில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆந்தாலஜி படங்களில்

ஆந்தாலஜி படங்களில்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ,மற்றும் கன்னடம் என 4 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தனித்துவமான படங்களாக இன்றுவரை இருக்க ஆந்தாலஜி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் பண்ணா உட்ரணும் என்ற பகுதியில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருந்தார்.

இரட்டை வேடத்தில் அஞ்சலி

இரட்டை வேடத்தில் அஞ்சலி

முதல் முறையாக அஞ்சலி இரட்டை வேடத்தில் இதில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். பாவக் கதைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் துணிந்தபின் என்ற பகுதியில் முத்துலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவ்வாறு திரைப்படங்கள் என்றாலும் சரி ஆந்தாலஜி படங்கள் என்றாலும் சரி தன்னுடைய அசாத்தியமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் தமிழில் நேர்கொண்டபார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இதில் நடிகர் பவன் கல்யாண் லீட் ரோலில் நடித்திருக்க பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக அஞ்சலி நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார். இப்படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. மீண்டும் தெலுங்கில் F3 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எப் 3 உருவாகிறது

எப் 3 உருவாகிறது

F1 & F2 ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அதன் தொடர்ச்சியாக F3 உருவாக இருக்க இதிலும் நடிகர் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜா கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அஞ்சலியை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம் இயக்கத்தில் தொடர்ந்து தரமணி, பேரன்பு ஆகிய படங்களுக்குப் பிறகு இப்பொழுது நான்காவது முறையாக புதிய படத்தில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

போலீஸுக்கு வந்த சிக்கல்

போலீஸுக்கு வந்த சிக்கல்

போலீஸ்காரர்களிலேயே ஒரு சிலர் தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவர்களை பிடிக்க அதுவரையில் நண்பர்களாக இருந்த சக போலீஸ்காரர்களே அரசு உதவியுடன் அவர்களை பிடிக்க எவ்வாறு வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியமாக காட்டியுள்ள இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே மாற்ற மொழிகளின் ரீமேக் உரிமை விற்றுத் தீர்ந்தது. இதில் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் அல்லு அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கைப்பற்றி இருந்தார். மேலும் தமிழ் உரிமையை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் இந்தி உரிமையை நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் வாங்கி இருந்தனர்.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

இதில் தெலுங்கு ரீமேக் மட்டும் விறுவிறு வேகத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தின் முதன்மையான மூன்று கதாபாத்திரங்களான குஞ்சக்கோ போபன் கதாபாத்திரத்தில் சத்ய தேவ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ராவ் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர் . பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் நாயட்டு தமிழ் ரீமேக்கை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க உள்ளார் இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X