10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடை போடும் அண்ணாத்த டைட்டில் சாங்!

சென்னை: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டியது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்து இருந்தனர்

டி இமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்ப தற்போது டைட்டில் சாங் அண்ணாத்த அண்ணாத்த 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது

அண்ணன்-தங்கை பாசத்தை

அண்ணன்-தங்கை பாசத்தை

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து கதையில் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அஜித்துடன் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்த சிறுத்தை சிவா முதல் முறையாக ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து இயக்கிய அண்ணாத்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதை களத்தில் உருவானது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பாக குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள்.

ரஜினிகாந்துக்கு தங்கையாக

ரஜினிகாந்துக்கு தங்கையாக

கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என இரண்டு முன்னணி நடிகைகள் இதில் நடித்திருந்தனர். இதுவரை பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ரஜினிகாந்துக்கு தங்கையாக இந்த படத்தில் நடித்து அசத்தியிருப்பார். தர்பார் படத்தை தொடர்ந்து நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் 90களின் கனவுக் கன்னிகளாக வலம் வந்த மீனா மற்றும் குஷ்புவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கதைக்கு மேலும் மெருகேற்றி இருப்பார்கள்.

முழுவதும் சென்டிமென்ட்

முழுவதும் சென்டிமென்ட்

முதல் பாதி முழுவதும் காமெடியாகவும் இரண்டாவது பாதி முழுவதும் சென்டிமென்ட் மட்டும் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியிருக்க பார்க்கும் அனைவரையும் வெகுவாக கவர்ந்த இந்த படம் கொரோனாவுக்கு மத்தியிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி திருவிழா கோலம் பூண்டது. டி இமானின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. வழக்கம்போல ரஜினிகாந்தின் ஓபனிங் பாடல் இந்தப் படத்திலும் ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டது.

10 மில்லியன்

10 மில்லியன்

எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் அண்ணாத்த அண்ணாத்த என தொடங்கும் இந்த பாடல் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. மேலும் ரஜினிகாந்த் நிஜவாழ்க்கையில் கூறும் தத்துவங்கள் இந்த இதில் பாடல் வரிகளாக சேர்த்திருப்பார்கள். துள்ளலான இசையில் அட்டகாசமான வரிகளில் வெளியான அண்ணாத்த பாடல் இப்பொழுது யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X