twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமல் மீது மற்றொரு சினிமா விநியோகஸ்தர் பண மோசடி புகார்

    |

    சென்னை : நடிகர் விமல் மீது ஏற்கனவே இரண்டு தயாரிப்பாளர்கள் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மற்றொறு சினிமா விநியோகஸ்தரும் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

    Recommended Video

    Producer singaravelan file complaint on actor Vimal

    நடிகர் விமல் மீது திரைத்துறையை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து போலீஸ் புகார் அளித்து வருவது கோலிவுட்டிலும், மீடியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் பக்கம் பேசுவது என தெரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.

    பழம்பெரும் நடிகர் சக்ரவர்த்தி மும்பையில் காலமானார்... 80 படங்களுக்கு மேல் நடித்தவர்! பழம்பெரும் நடிகர் சக்ரவர்த்தி மும்பையில் காலமானார்... 80 படங்களுக்கு மேல் நடித்தவர்!

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    நடிகர் விமல், ரூ.5 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மன்னர் வகையறா படத்தை தயாரித்து விட்டு, அந்த பணத்தை திருப்பி தராமல் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார் என கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விமல், கோபி மற்றும் சிங்கார வேலன் இருவரும் திட்டமிட்டு சதி செய்து வருவதாக கூறினார்.

    விமல் மீது போலீசில் புகார்

    விமல் மீது போலீசில் புகார்

    இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்கார வேலனும், நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்தார். அதில், ரூ.1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் லிங்கா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கிற பொதுவுடமை
    உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார்.

    களவாணி 2 படத்தால் வந்தது

    களவாணி 2 படத்தால் வந்தது

    அந்த சமயத்தில் விமலின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து, பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி, பாதியில் கைவிடப்பட்ட மன்னர் வகையறா என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார். நானும் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து, ரூ.5 கோடி பணம் வாங்கிக் கொடுத்தேன். களவாணி 2 படத்திற்காக முன்பணமாக ரூ.1.5 கோடி கொடுத்தேன். ஆனால் சொன்ன படி படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை.

    திசை திருப்ப விமல் முயற்சி

    திசை திருப்ப விமல் முயற்சி

    இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும், நான் ஏமாற்றிவிட்டதாக பொய்யான புகாரை கொடுத்துள்ளார் நடிகர் விமல். அவதூறு கருத்துக்களையும் மீடியாக்களில் பரப்பி வருகிறார் என புகார் மனுவில் சிங்கார வேலன் குறிப்பிட்டிருந்தார்.

    இன்னொருத்தரும் புகார்

    இன்னொருத்தரும் புகார்

    கோபி மற்றும் சிங்கார வேலன் அளித்த புகார் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சினிமா விநியோகஸ்தர் கங்காதரன் என்பவரும் போலீசில் நடிகர் விமர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளது, இந்த பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது.

    English summary
    After Cinema distributor Gopi and Producer Singara Vadivelu, now another distributor filed police complaint against actor Vimal. Distributor Gangadharan also filed money laundering complaint. But Vimal denied all this complaints against him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X