காதலில் விழுந்த அனு இம்மானுவேல்? அட, இந்த நடிகரின் தம்பியாச்சே இவரு!

சென்னை : பிரபல நடிகர் ஒருவருடன் நடிகை அனு இம்மானுவேல் டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து, சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அனு இம்மானுவேல்

அனு இம்மானுவேல்

மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அனு இம்மானுவேல் முதன் முதலாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதையடுத்து, தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அனு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

பிரபல நடிகருடன் டேட்டிங்

பிரபல நடிகருடன் டேட்டிங்

தமிழ் மட்டுமல்லாது டோலிவுட்டில் அறிமுகமான அம்மணிக்கு தெலுங்கில் பட படவாய்ப்புகள் குவிந்ததை அடுத்து, அங்கேயே செட்டிலான அனு இமானுவேல் அவ்வப்போது கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார். ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குநரை காதலிப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து, அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷுனை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

இருமுறை சந்தித்துள்ளேன்

இருமுறை சந்தித்துள்ளேன்

நீண்ட நாட்களாக இவர்களின் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை இம்மானுவேல் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஊர்வசிவோ ராக்ஷசிவோ படத்தில் நடிப்பதற்கு முன்பு அல்லு ஷிரிஷை இரண்டு முறை நான் சந்தித்துள்ளேன். இப்படத்தின் கதாபாத்திரம் பற்றி இருவரும் காஃபி ஷாப்பில் சந்தித்து பேசினோம். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதால் நாங்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது என்றார்.

ஊர்வசிவோ ராக்ஷசிவோ

ஊர்வசிவோ ராக்ஷசிவோ

இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அல்லு சிரிஷின் தந்தை அல்லு அரவிந்தும் என் மகனுடன் டேட்டிங் போறியா என்ற கிண்டலாக கேட்டார். இருவர் குறித்து பரவிவரும் வதந்தி பற்றி நாங்களே பலமுறை பேசி சிரித்து இருக்கிறோம் என்றார். 'ஊர்வசிவோ ராக்ஷசிவோ' தெலுங்கு திரைப்படம் திரையரங்கில் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X