twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Boycott trendல் படம் ஓடலன்னு சொல்றது முட்டாள்தனம்.. அமீர்கான் குறித்து அனுபம் கெர் சொன்னத பாருங்க!

    |

    மும்பை : ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ரீமேக்காக உருவாயுள்ளது அமீர்கானின் லால் சிங் சத்தா.

    இந்தப் படம் கடந்த வெளியானது முதல் பாய்காட் லால் சிங் சத்தா என்ற சமூக வலைதள பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இதையொட்டி பல கோரிக்கைகளை அமீர்கான் செய்தாலும் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.இந்தப் படத்தில் அமீர்கானுடன் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

    காஸ்ட்லி சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்...விலை எவ்வளவு தெரியுமா? காஸ்ட்லி சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்...விலை எவ்வளவு தெரியுமா?

    நடிகர் அமீர்கான்

    நடிகர் அமீர்கான்

    நடிகர் அமீர்கானின் படங்கள் எல்லாமே அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்துவிடும். ஆனால் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா அவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்துள்ளது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியானது.

    குறைவாக வசூலித்த அமீர்கான் படம்

    குறைவாக வசூலித்த அமீர்கான் படம்

    இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கும் வந்திருந்தார் அமீர்கான். அந்த வகையில் அனைத்து மொழிகளிலும் சிறப்பான பிரமோஷனை படத்திற்கு அளித்திருந்தார். ஆனாலும் இந்தப் படம் முதல் நாளில் சர்வதேச அளவில் 12 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்தது. அமீர்கான் படங்களில் மிக குறைவாக வசூலித்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய்களை மட்டுமே லால் சிங் சத்தா வசூலித்துள்ளது.

    பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்

    பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்

    இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதை செய்ய வேண்டாம் என்று அமீர்கான் கேட்டுக் கொண்டாலும் தொடர்ந்து இந்த வாசகம் ட்ரெண்டிங்கிலேயே இருந்தது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக அமீர்கான் தரப்பு தற்போது வருத்தம் தெரிவித்து வருகிறது.

    பாய்காட் ட்ரெண்ட் வசூலை பாதிக்காது

    பாய்காட் ட்ரெண்ட் வசூலை பாதிக்காது

    இந்நிலையில், பாய்காட் ட்ரெண்ட் எந்தவகையிலும் படத்தின் வசூலை பாதிக்காது என்று பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார். முன்னதாக ரிலீசான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் இதுபோன்ற சர்ச்சையை சந்தித்தது. ஆனால் அது அந்தப் படத்தின் வசூலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    கருத்துச் சுதந்திரம் உண்டு

    கருத்துச் சுதந்திரம் உண்டு

    பாய்காட் ட்ரெண்ட் மூலம் படம் சரியாக ஓடவில்லை என்று கூறுவது முட்டாள்தனமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவருவருக்கும் தங்களது கருத்துக்களை பகிர்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும் ஒரு படத்தை பார்க்கக்கூடாது என்று தீர்மானிப்பது தனிப்பட்ட நபர்களின் உரிமை என்றும் அவர் கூறியுள்ளார்

    மோசமான தோல்வியாளர்

    மோசமான தோல்வியாளர்

    நம்முடைய படங்கள் ஓடினால் சாதாரணமாக இருப்பதும், சரியாக ஓடாவிட்டால் மற்றவர்கள்மீது பழியைத் தூக்கிப் போடுவதும் மோசமான தோல்வியாளரையே காட்டுகிறது என்றும் அவர் மறைமுகமாக அமீர்கானை சாடியுள்ளார். ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக வெளியான லால் சிங் சத்தா படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

    English summary
    Actor Anupam kher reacts on Boycott trend of Lal singh Chaddha movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X