»   »  விராத் கோஹ்லி காதலுக்காக விதிகளைத் தளர்த்திய 'சுல்தான்' படக்குழு!

விராத் கோஹ்லி காதலுக்காக விதிகளைத் தளர்த்திய 'சுல்தான்' படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது காதலர் விராத் கோஹ்லிக்காக, 'சுல்தான்' படத்தின் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்து அவருக்குத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா.

சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சுல்தான்' திரைப்படம் 'ரம்ஜான்' ஸ்பெஷலாக நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Anushka Sharma Arranged Sultan Special Screen for Virat Kohli

இப்படத்தின் தகவல்கள் எதுவும் வெளியில் கசியக்கூடாது என்பதற்காக, படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா பத்திரிகையாளர் சிறப்புக் காட்சிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஆனால் தனது காதலர் விராத் கோஹ்லி இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய அனுஷ்கா சர்மா, அதற்காக ஆதித்யா சோப்ராவிடம் அடம்பிடித்து சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அனுஷ்காவின் இந்த சிறப்புக்காட்சி திட்டத்திற்கு சல்மானும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. சல்மானின் தலையீடு காரணமாக ஆதித்யா சோப்ராவும் தனது விதிகளைக் தளர்த்திக் கொண்டு அனுமதி அளித்திருக்கிறார்.

'சுல்தான்' சிறப்புக் காட்சியை பார்த்த விராத் கோஹ்லி 'சுல்தான்' படத்தையும், அனுஷ்கா நடிப்பையும் மனதாரப் பாராட்டினாராம்.

English summary
Actress Anushka Sharma Special Screened Sultan Movie for Virat Kohli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil