Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
கேக் ஊட்டிய விஜய்... துள்ளி குதித்த அபர்ணா தாஸ்... என்ன கொண்டாட்டம்னு பாருங்க!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூல்மழை பொழிந்துள்ளது.
அந்த ஒரு போட்டோ மட்டுமல்ல.. என்கிட்ட இன்னும் நிறைய இருக்கு.. அபர்ணா தாஸ் வெளியிட்ட பீஸ்ட் பிக்ஸ்!

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 13ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசானது பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

வசூல்மழையில் பீஸ்ட்
ஆயினும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வசூல்ரீதியாக சூப்பர் ஹிட்டடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களும் படம் தங்களுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சொதப்பியதாக விமர்சனம்
நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் நெல்சன் முந்தைய படங்களை போல இல்லாமல் இந்தப் படத்தில் சொதப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரே இடத்தில் விஜய்யை ஒரே காஸ்ட்யூமில் அவர் காட்டியிருந்தார்.

மாஸ் ஹீரோவை வீணடித்த நெல்சன்
ஒரு மாலில் கடத்தப்படும் பொதுமக்களை விஜய் காப்பாற்றுவதாக கதைக்களத்தை படம் கொண்டிருந்தது. ஆனால் படத்தில் லாஜிக் மீறல்கள் அதிகமாக இருந்ததாகவும் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை நெல்சன் வீணடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்
ஆனால் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு தனது வீட்டில் சக்சஸ் பார்ட்டிக் கொடுத்திருந்தார். இந்த பார்ட்டியில் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் புகைப்படத்தை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் வைரலானது.
|
பிறந்தநாள் வீடியோ வெளியீடு
இதை தொடர்ந்து அபர்ணா தாசும் சூட்டிங்கின்போது விஜய் உள்ளிட்டவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். இன்னும் இருக்கு என்றும் கேப்ஷன் வெளியிட்டார். இந்நிலையில் அவர் சொன்னதற்கு ஏற்றாற்போல தற்போது விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கேக் ஊட்டிவிட்ட விஜய்
இந்த வீடியோவில் அபர்ணா தாசின் பிறந்தநாளை விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர். விஜய்க்கு அபர்ணா தாஸ் கேக் ஊட்டிவிட, அவர் பதிலுக்கு பர்த்டே பேபிக்கு கேக் ஊட்டிவிட, வீடியோ மிகவும் அழகாக காணப்படுகிறது. இடையில் சந்தோஷம் தாளாமல் அவர் துள்ளி குதிக்கிறார்.