»   »  ஹீரோக்கள் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும்!- ஏ ஆர் முருகதாஸ்

ஹீரோக்கள் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும்!- ஏ ஆர் முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கதாநாயகர்கள் புதிய இயக்குநர்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று இயக்குநர் முருகதாஸ் கூறினார்.

அதர்வா-கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். புதிய இயக்குநர் டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டார்.

கத்தி பிரச்சினைகள்

கத்தி பிரச்சினைகள்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த விழாவில் பேசுகையில், "நான் இயக்கிய துப்பாக்கி படத்தை எஸ்.தாணு தயாரித்தார். அந்த படம் வெளியானபோது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன்பிறகு கத்தி படத்தை இயக்கினேன். ஒரு கத்தியைத்தான் எடுத்தேன். ஆனால் அந்த படத்துக்கு எதிராக நூறு கத்திகள் வந்தன.

தாணு உதவி

தாணு உதவி

சென்னையில் அந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் குண்டு வெடித்தது. இதனால் கத்தி படம் வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது எஸ்.தாணு உதவினார்.

புதிய இயக்குநர்கள்

புதிய இயக்குநர்கள்

தற்போது என்னிடம் பணியாற்றிய சந்தோஷை கணிதன் படம் மூலம் டைரக்டராக்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எல்லோரும் டைரக்டர்கள் ஆகிவிட்டனர்.

விஜய் - அஜீத்

விஜய் - அஜீத்

அதர்வா புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிக்கிறார். கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வருவது, காலை 9 மணிக்கே படப்பிடிப்புக்கு வருவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. நல்ல கதைகளை கண்டு பிடித்து நடிக்க வேண்டும். அதர்வா சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். எனக்கு தெரிந்த வரை விஜய், அஜித்குமார் இருவரும்தான் அதிகமான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளனர்.

5-ல் 3

5-ல் 3

கதாநாயகர்கள் நிறைய புது இயக்குநர்களை அறிமுகம் செய்ய வேண்டும். 5 படங்களில் அவர்கள் நடித்தால் அவற்றில் 3 படங்களை புதுமுக டைரக்டர்களுக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

English summary
Director Murugadass urged heroes to show interest in introducing new directors in their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil