»   »  இந்தப் பொண்ணு சிம்ரன் இடத்தைப் பிடிப்பார்! - முருகதாஸ் சொல்வதில் லாஜிக் இருக்கா!!

இந்தப் பொண்ணு சிம்ரன் இடத்தைப் பிடிப்பார்! - முருகதாஸ் சொல்வதில் லாஜிக் இருக்கா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத் தட்டினை வெளியிட்டார்.

AR Murugadass wishes debutant heroine Sana to become next Simran

அவர் பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல் பட இயக்குனரின் படத்தை நான்தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது.

AR Murugadass wishes debutant heroine Sana to become next Simran

சிலர் உதவி இயக்குநர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குநர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சின்னதிரையில் இருந்து வந்து இயக்குநராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால் தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும்.

AR Murugadass wishes debutant heroine Sana to become next Simran

நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார்.

AR Murugadass wishes debutant heroine Sana to become next Simran

சிம்ரன் முதல் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்," என்றார்.

English summary
Director AR Murugadass has wished Rangoon movie heroine Sana to become next Simran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil