Don't Miss!
- Technology
ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Finance
அதானி, அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை..!
- Automobiles
இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
27 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூப்பர்ஸ்டார்கள்? பாலிவுட்டில் ஏஆர் முருகதாசுக்கு அடித்த லக்கி சான்ஸ்!
மும்பை : நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தை இறுதியாக இயக்கியிருந்தார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.
தொடர்ந்து விஜய்யுடன் இவர் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தின்
ஏகே
61
படத்தில்
இணைந்த
வில்லன்
நடிகர்...இப்போ
யார்
தெரியுமா?

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்
தமிழில் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். இவரது படங்களில் காட்சி அமைப்புகள், திரைக்கதை சிறப்பாக அமைந்துவிடும். ஆனால் கதைக்கு இவர் முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் இவர்மீது வைக்கப்பட்டு வருகிறது. இவர் இறுதியாக ரஜினியின் தர்பார் படத்தை இயக்கியிருந்தார்.

ரஜினியின் தர்பார்
தர்பாரில் ரஜினி மாஸ் காட்டியிருந்தார். இளம் வயது பெண்ணிற்கு அப்பாவாக, அவரது வற்புறுத்தலின்பேரின் நயன்தாராவை காதலிப்பவராக இந்தப் படத்தில் ரஜினியின் கேரக்டர் அமைந்திருந்தது. போலீஸ் அதிகாரியாக, முக்கியமான வழக்கை ஹேண்டில் செய்த நிலையில், தன்னுடைய மகளை பரிகொடுக்கும் இந்தக் கேரக்டரில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்தது.

ரயில் நிலைய பாடல்
படத்தின் பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், ரயில் நிலையத்தில் பாடப்படும் பாடல் ரஜினிக்கு பெஸ்ட்டாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. விஜய்யுடன் அவர் அடுத்தப்படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டது.

விஜய்யை இயக்கும் சான்ஸ்
குறிப்பாக துப்பாக்கி 2 படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது வாரிசு படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆனால் முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

கான்களை இயக்கும் முருகதாஸ்
இதனிடையே அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் பாலிவுட்டில் படமியக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் கான்களை அவர் இயக்கவுள்ளாராம். இதற்கான முயற்சியில் அமீர்கான் முழுமூச்சில் ஈடுபட்டதாகவும் தற்போது சல்மான் மற்றும் ஷாருக் இந்தப் படத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

27 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி
கடந்த 1995ல் கரண் அர்ஜுன் என்ற படத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து சில படங்களில் கேமியோ ரோல்களில் இருவரையும் இணைந்து பார்க்க முடிந்தது. முழுநீள படத்தில் இருவரும் இணைந்து நடிக்காத நிலையில் தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

ரசிகர்கள் உற்சாகம்
இந்தப் படத்தைதான் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது பாலிவுட் ரசிகர்களை மிகுந்த உற்சாகம் கொள்ள செய்துள்ளது. இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சூப்பர்ஸ்டாரை வைத்து படம் இயக்குவதே பெரும் சவாலான விஷயம் என்ற வகையில், ஷாருக் மற்றும் சல்மான் இருவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் பெரிய சவால் ஏஆர் முருகதாசுக்கு உள்ளது.