Don't Miss!
- News
தமிழ்நாடு முழுவதும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள்! விவாதிக்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு!
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Technology
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
- Automobiles
இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது... கீரவாணிக்கு ஏஆர் ரஹ்மான், ஷாருக்கான் வாழ்த்து
லாஸ்
ஏஞ்சல்ஸ்:
ராஜமெளலி
இயக்கிய
ஆர்.ஆர்.ஆர்
திரைப்படத்திற்கு
கீரவாணி
இசையமைத்திருந்தர்.
ராம்
சரண்,
ஜூனியர்
என்டிஆர்
நடிப்பில்
க்டந்தாண்டு
வெளியான
இந்தப்
படத்தின்
பாடல்களும்
பின்னணி
இசையும்
நல்ல
வரவேற்பைப்
பெற்றது.
இந்நிலையில்,
இந்தப்
படத்தில்
இடம்பெற்ற
நாட்டு
நாட்டு
பாடல்
கோல்டன்
குளோப்
விருதை
வென்று
அசத்தியுள்ளது.
இதனையடுத்து
இசையமைப்பாளார்
கீரவாணிக்கு
இந்திய
திரையுலக
பிரபலங்கள்
பலரும்
தங்களது
வாழ்த்துகளை
தெரிவித்து
வருகின்றனர்.

கோல்டன் குளோப்ஸ் 2023
ராஜமெளலி, இயக்கிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தத் திரைப்படத்தில். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கீரவாணி இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

இசைப்புயலின் பாராட்டு
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்தது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரின் வெறித்தனமான ஆட்டத்தால் மாஸ் காட்டியது இந்தப் பாடல். இதனிடையே கோல்டன் குளோப் விருது வென்ற கீரவாணிக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சிறந்த முன்னுதாரணமான மாற்றம், இப்போது இந்தியர்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார்.

சிரஞ்சீவி, நாகர்ஜுனா வாழ்த்து
அதேபோல் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க சாதனை என பாராட்டியுள்ள அவர், கீரவாணிக்கும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த இசைக்கான விருதை வென்ற கீரவாணியை பாராட்டியுள்ள அவர், ஆஸ்கர் போட்டியிலும் வெற்றி பெறும் என வாழ்த்தியுள்ளார்.

ஷாருக்கான், அஜய் தேவ்கன் வாழ்த்து
இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காலை எழுந்ததில் இருந்து நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததை நடனமாடி கொண்டாடுகிறேன். இது இந்தியாவுக்கு பெருமையான தருணம் என தனது டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்த அஜய் தேவக்ன்னும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இவர்களுடன் ஹூமா குரேஷி, நிம்ரத் கவுர் உள்ளிட்ட பலரும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கும் கீரவாணிக்கும் வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்துள்ளனர்.

உலகநாயகனின் வாழ்த்து
அதேபோல் தமிழ்த் திரையுலகில் உலகநாயகனாக கொண்டாடப்படும் கமலும் கீரவாணிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. ராஜமெளலி இயக்கிய RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப்ஸ் விருது வென்று தந்திருக்கிறார் கீரவாணி. முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.