For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழ் புத்தாண்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான் கொடுக்கப் போகும் மாஸ் ட்ரீட்.. ஆனால், இப்படியொரு பிரச்சனை?

  |

  சென்னை: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் ஏப்ரல் 14 மற்றும் 15 தேதிகளில் சுதேசி பாடகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.

  Yaal fest என அழைக்கப்படும் அந்த இசைத் திருவிழாவில் சென்னை, டொரண்டோ, கல்கேரி, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர்களில் இருந்து இண்டிபென்டன்ட் இசைக் கலைஞர்கள் பாடல்களை பாட உள்ளனர் என அறிவித்துள்ளார் ரஹ்மான்.

  ஆனால், அவர் தமிழ் புத்தாண்டு என போட்டிருப்பது அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளது.

  பூஜா ஹெக்டே குறித்த விஜய்யின் கமெண்ட்... பூஜாவோட ரியாக்ஷனை பாருங்க! பூஜா ஹெக்டே குறித்த விஜய்யின் கமெண்ட்... பூஜாவோட ரியாக்ஷனை பாருங்க!

  ஏ.ஆர். ரஹ்மான் தான் டிரெண்டிங்

  ஏ.ஆர். ரஹ்மான் தான் டிரெண்டிங்

  பாஜக தலைவர் அமித்ஷா இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தமிழணங்கு என தமிழ் அன்னையின் போஸ்டரை போட்டது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அமித்ஷாவுக்கு மறைமுகமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார் என பேச்சுக்கள் கிளம்பின.

  Recommended Video

  இந்தியாவின் இணைப்புமொழி தமிழ்தான் - அமித்ஷாவுக்கு ஏஆர் ரஹ்மான் பதிலடி!
  தமிழ் தான் இணைப்பு மொழி

  தமிழ் தான் இணைப்பு மொழி

  ஏ.ஆர். ரஹ்மான் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், அவரை மடக்கிப் பிடித்து காரில் ஏறும் போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு "தமிழ் தான் இணைப்பு மொழி" என தடாலடி பதிலை கொடுத்து மேலும், பரபரப்பை கூட்டினார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதில் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. பாஜகவினர் ஏ.ஆர். ரஹ்மான் மீது பயங்கர கடுப்பாகி உள்ளனர்.

  ஐகான் விருது

  ஐகான் விருது

  சிஐஐ மாநாட்டில் தென்னிந்திய திரைத்துறையினர் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஐகான் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

  YAAll திருவிழா

  YAAll திருவிழா

  இந்நிலையில், வரும் ஏப்ரல் 14 மற்றும் 15ம் தேதி சென்னை, டொரண்டோ, கல்கேரி, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர்களில் இருந்து இண்டிபென்டன்ட் இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் Yaall இசைத் திருவிழா பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். சந்தோஷ் நாராயணன், பாடகி தீ உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

  தமிழ் புத்தாண்டு பிரச்சனை

  தமிழ் புத்தாண்டு பிரச்சனை

  பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு திராவிட மாடலில் தமிழன்னை புகைப்படத்தை ஷேர் செய்திருந்த ஏ.ஆர். ரஹ்மான், தற்போது ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு என போட்டிருக்கும் ட்வீட்டிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு அடுத்த பிரச்சனையை உருவாக்கி உள்ளனர்.

  விஜய் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

  விஜய் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

  சன் டிவியிலேயே பேட்டி கொடுத்த நடிகர் விஜய்யும் வரும் ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என வாழ்த்தி இருந்தார். ஆனால், அதனை சன் டிவி நிறுவனம் எந்தவொரு எடிட்டும் செய்யாமல் அப்படியே போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறீர்கள் என ரஹ்மான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  மாமன்னன் இசை

  மாமன்னன் இசை

  சாதிய ரீதியிலான படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்கிற கொள்கையில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடிக்கும் மாமன்னன் படத்திற்கு இசையமைத்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், திமுகவினர் இப்படியொரு பிரச்சனையை கிளப்பினாலும், தலைமை அதனை சரிகட்டி விடும் என்கிற பேச்சுக்களே எழுந்துள்ளன.

  English summary
  Isai Puyal AR Rahman’s Tamil New Year Yaall fest announcement stirs another issue. He mentioned Tamil New Year makes controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X