மகள் ஆடை விவகாரம்.. திரும்பவும் அழகழகான போட்டோக்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களையும் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Recommended Video

சென்னை: தன் மகளின் உடை தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பிள்ளைகளின் மேலும் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் தனது தந்தை குறித்து பெருமையாக உணர்ச்சிகர உரை நிகழ்த்தினார் கதீஜா. ஆனால், அவரது உரையைவிட உடையைப் பற்றி தான் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. காரணம், அவர் முகத்தை மூடி புர்கா அணிந்திருந்தார்.

புகார்:
மகளை உடை விசயத்தில் கட்டாயப்படுத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக கதீஜாவும் உரிய விளக்கத்தை அளித்தார். ஆனாலும் நெட்டிசன்கள் தங்களது பேச்சை நிறுத்தவில்லை.

பதிலடி புகைப்படம்:
இதையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் தனது மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஆடையைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு' எனத் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி ஒவ்வொரு ஆடை அணிந்திருந்தனர்.

மீண்டும் புகைப்படம்:
இந்நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களிலும் கஜீதா புர்கா அணிந்தே காணப்படுகிறார். அவரது மற்ற இரண்டு குழந்தைகளான ரஹீமா மற்றும் அமீன் இந்தப் புகைப்படங்களில் நாகரீக உடை அணிந்துள்ளனர்.

குடும்பப்படம்:
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











