»   »  மொகஞ்சதரோ.. மயக்கும் குரலில் டூயட் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

மொகஞ்சதரோ.. மயக்கும் குரலில் டூயட் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் மொகஞ்சதரோ படத்திற்காக ஒரு அழகிய காதல் பாடலைப் பாடியுள்ளாராம் .

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் மொகஞ்சதரோ. இந்தியில் உருவாகி வரும் இப்படத்தை பிரபல இயக்குநர் அசுதோஷ் கோவரிக்கர் இயக்கியுள்ளார்.

ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளர்.

ரஹ்மான் பாடிய பாடல்...

ரஹ்மான் பாடிய பாடல்...

ஆதி நாகரீகம், சாகசம், காதல் என கலந்து கட்டி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் கோவரிக்கர். இதில் ரஹ்மானின் மயக்கும் குரலில் ஒரு காதல் பாடல் இடம் பெற்றுள்ளதாம்.

தும்ஹோ...

தும்ஹோ...

தும்ஹோ என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். இப்பாடலை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்படத்திலிருந்து வெளியிடப்படும் முதல் பாடலும் இதுதான்.

வித்தியாசமான அனுபவம்...

வித்தியாசமான அனுபவம்...

இப்படம் குறித்து கோவரிக்கர் கூறுகையில், "இது நானும் ரஹ்மானும் இணையும் 5வது படமாகும். முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை நாங்கள் இருவருமே இதில் கண்டோம்" என்று கூறியுள்ளார்.

ஜோதா அக்பர்...

ஜோதா அக்பர்...

இதற்கு முன்பு இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் லகான், ஸ்வதேஷ், ஜோதா அக்பர் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும். வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழிலும் எதிர்பார்ப்பு...

தமிழிலும் எதிர்பார்ப்பு...

மொகஞ்சதரோ பெரும் எதிர்பார்ப்பை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளதாலும், அதில் ரஹ்மானின் பங்களிப்பு எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளதாலும், இப்படம் தமிழக ரசிகர்களிடமும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ஆகஸ்ட் ரிலீஸ்...

இப்படத்தில் டிரெய்லர் ஏற்கனவே ஆர்வத்தைத் தூண்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது.

English summary
Oscar-winning composer A.R. Rahman, who has composed songs for filmmaker Ashutosh Gowariker's Mohenjo Daro, has also lent his voice to a romantic song for the upcoming epic adventure-romance film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil