»   »  ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் ஒரு மகுடம்

ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் ஒரு மகுடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையுலகில் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் உயரிய விருதான புகுவோகா விருதை அவருக்கு வழங்குவதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் 'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் மூலமாக, 2 ஆஸ்கர் விருதுகளை வென்று உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தார்.

AR Rahman wins Japan's Fukuoka Award

தன்னுடைய இசைக்காக ஆஸ்கர் தொடங்கி கிராமி, கோல்டன் குளோப் உட்பட ஏராளமான விருதுகளை ரஹ்மான் வென்றிருக்கிறார்.இந்நிலையில் ஜப்பான் நாட்டின் புகுவோகா விருதை ரஹ்மானுக்கு வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி இந்த விருதை ஜப்பான் அரசு வழங்குகிறது. இதுகுறித்து ரஹ்மான் ''புகுவோகா விருதிற்கு நன்றி. மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

English summary
Music Composer AR Rahman wins Japan's Fukuoka Award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil