அரண்மனை கிளி சீரியல் ஏன் நிறுத்துனாங்கன்னு தெரியுமா? ...இது தான் காரணமாம்

சென்னை : பல விதங்களில் சுவாரஸ்யமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பது விஜய் டிவி. விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் பலரிடமும் பிரபலமாக இருந்து வருகிறது.

இதில் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருந்தது அரண்மனைக்கிளி சீரியல். வழக்கமான பணக்கார மாமியார், ஏழை மருமகள் கதை தான் என்றாலும் அதை வித்தியாசமாக கதைக்களத்துடன் சொல்லி இருப்பார்கள்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

வேலைக்காரரின் மகளான ஜானகி, சந்தர்ப்ப சூழ்நிலையால் மாற்றுத்திறனாளியான முதலியாளியின் மகன் அர்ஜுனை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு அவர்களுக்குள் ஏற்படும் காதல், குடும்ப பிரச்சனை ஆகியவற்றை பல கோணங்களில் சொல்லுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும்.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட காரணம்

பாதியிலேயே நிறுத்தப்பட்ட காரணம்

கடந்த ஆண்டு பாதியிலேயே இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. கொரோனா காரணங்களால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது தான் காரணமாக கூறப்பட்டது. கொரோனாவால் தான் அரண்மனைக்கிளி பாதியில் நிறுத்தப்பட்டதாக சீரியலின் ஹீரோவான தர்ஷனும் உறுதிப்படுத்தி உள்ளார்.

அரண்மனைக்குள் கொரோனா புகுந்துடுச்சு

அரண்மனைக்குள் கொரோனா புகுந்துடுச்சு

இது பற்றி இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தர்ஷன் அளித்த பதிலில், அரண்மனைக்குள் கொரோனா வந்து, கிளி பாதிக்கப்பட்டு விட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக எங்களால் படப்பிடிப்பை நடத்த முடியாததால் முடித்துக் கொண்டோம். அதனால் அந்த விஷயம் முடிந்தது. அது எப்போதும் எனக்கும் ஸ்பெஷல் சீரியல் தான்.

விரைவில் நல்லது நடக்கும்

விரைவில் நல்லது நடக்கும்

உங்களில் பலர் அரண்மனைக்கிளி மற்றும் அர்ஜுன் - ஜானுவின் ரசிகர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கு எனது நன்றி. வருங்காலத்தில் நல்லது நடக்கும் என நம்புவோம். அரண்மனைக்கிளி ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்விகளுக்கு இது போதுமான பதிலாக இருக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X