»   »  அரண்மனை 2 வெற்றிகரமாக முடிந்தது - த்ரிஷா

அரண்மனை 2 வெற்றிகரமாக முடிந்தது - த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக படத்தின் 3 நாயகிகளில் ஒருவரான த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், வசூலையும் ஒருசேரக் குவித்த படம் அரண்மனை. அரண்மனை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 2 படத்தை சுந்தர்.சி எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்து விட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது "அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்து வந்திருக்கிறது.

ஆனால் படத்தைப் பார்க்க பொங்கல் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

சுந்தர் சியின் அரண்மனை 2 பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sundar.C's Aranmanai 2 Hero Siddharth Wrote on Twitter 'It's a wrap on #Aranmanai2 As always the best time working with my dear #SundarC & khushsundar Pongal special:).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil