»   »  'பேஸ்புக்' மாதிரியே கிரிக்கெட்டிலும் மோதட்டும்.. 'விஜய்- அஜீத்'தை மோத விட நடிகர் சங்கம் பிளான்!

'பேஸ்புக்' மாதிரியே கிரிக்கெட்டிலும் மோதட்டும்.. 'விஜய்- அஜீத்'தை மோத விட நடிகர் சங்கம் பிளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்படும், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், நடிகர் விஜய் - அஜித் தலைமையிலான அணிகளை நேரடியாக மோத வைக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதியைத் திரட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதன்படி, அடுத்தமாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி...

ஏப்ரம் 10ம் தேதி இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முக்கிய நடிகர்களையும் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் - அஜித் அணிகள்...

விஜய் - அஜித் அணிகள்...

குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் ஒரு போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் விஜய் மற்றும் அஜித் தலைமையிலான அணிகளை மோத வைக்க நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனராம்.

ரசிகர்கள்...

ரசிகர்கள்...

ஏற்கனவே சமூகவலைதளங்களில் அஜித் - விஜய் ரசிகர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். ஒவ்வொருவரின் படங்கள் ரிலீசாகும் போது, பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இவர்களின் மோதல் வாடிக்கையாகி வருகிறது.

பக்கா பிளான்...

பக்கா பிளான்...

இந்த சூழ்நிலையில், நிஜமாகவே விஜய், அஜித் என இரண்டு நடிகர்களையும் மோத விட்டால், நிச்சயம் அந்தப் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதன் மூலம், சுலபமாக நடிகர் சங்கம் கட்டுவதற்குத் தேவையான பணத்தை திரட்டி விடலாம் என்பது நடிகர் சங்க நிர்வாகிகளின் எண்ணமாம்.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வர மாதிரி தான் இருக்கு...

English summary
The celebrity cricket tournament, that will be organized by the Actors' Association aka 'Nadigar Sangam' to raise funds in order to construct a building, will most likely have Thala Ajith's team pinned against Ilayathalapathy Vijay's team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil