Just In
- 51 min ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 6 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 7 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்களின் அன்பை காட்டவில்லை.. நல்லா எடிட் பண்ணியிருக்காங்க.. விஜய் டிவியை விளாசிய அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா விஜய் டிவி ஆரிக்கு ஃபேவராய் எடிட் செய்திருப்பதாக விளாசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. பல இழுபறிக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங்கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு!
பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று கூறிய அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு குரூப்பிஸம் செய்து வந்தார்.

ஆரி மீது காண்டு
அவ்வப்போது தவறான வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டில் சப்பாத்தி பிரச்சனை மற்றும் சாப்பாடு போடும் பிரச்சனையை ஆரி கிளப்பியதில் இருந்தே அவர் மீது செம காண்டில் இருந்துவந்தார் அர்ச்சனா.

ஏற்றிவிட்ட அர்ச்சனா
ஆரி மீது தவறே இல்லாவிட்டாலும் அவரை குறை சொல்வதையும் மற்றவர்களிடம் அவரை பற்றி பேசுவதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆரி மற்றவர்களின் குறைகளை மட்டுமே சொல்வதாக கூறி ஏற்றிவிட்டார் அர்ச்சனா.

மானஸ்தனாக இருக்கணும்
இதனாலே மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஆரி மற்றவர்களை மட்டப்படுத்துகிறார், குறை சொல்கிறார் என்ற மெண்டல் பிளாக்குடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த கோழிப் பண்ணை டாஸ்க்கின் போது ஆரியை மானஸ்தனாக இருக்க வேண்டும் என்றும் கூறி சாடினார்.

அர்ச்சனா வெளியேற்றம்
இதனால் கடுப்பான ரசிகர்கள் அர்ச்சனாவை முதலில் வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டினர். அதன்படியே அவருக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தனர். கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற போதும் அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

திட்டி தீர்த்த ரசிகர்கள்
அர்ச்சனா வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது டிவிட்டர் பக்கத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள் வெறுப்பை கக்கி வந்தனர்.

எல்லாத்திலும் டாப்
இதனை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடினார் அர்ச்சனா. அப்போது பேசிய ரசிகர் ஒருவர், அர்ச்சனா சமையல், டாஸ்க் மற்றும் எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார்.

உங்களுக்கு காட்டவில்லை
ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா அவருக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ் என பிக்பாஸ் மீது பழியை போட்டுள்ளார்.

ஒரு சீன் கூட காட்டலையா?
அர்ச்சனாவின் இந்த பதிலை பார்த்த மற்றொரு நெட்டிசன், ஓ மை காட், இது உண்மையா? 80 நாட்கள் கிளிப்பில் ஒன்னு கூட உங்க அன்பை காட்டலையா என்று கேட்டு நக்கலடித்துள்ளார்.

மோசமாக இருந்திருக்கும்
அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், ஹாஹா என சிரித்தப்படியே தவறான எடிட்டிங் என்ற தியரியை நீங்கள் சொல்வீர்கள், அவர்கள் என்னுடைய தவறை தான் காட்டினார்கள், மற்றவர்களை காட்டவில்லை என்று கூறுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அட கடவுளே.. நாங்கள் எல்லாத்தையும் பார்த்தோம்.. இன்னும் காட்டியிருந்தால் மோசமாக இருந்திருக்கும் என்றார்.

நல்ல எடிட்டிங் என்று கிண்டல்
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, நானா தவறான எடிட்டிங் என்றேன்.. நீங்கள் தான் சொல்கிறீர்கள்.. அது நல்ல எடிட்டிங்தான்.. ஆரி புரோவுக்காக மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். நல்ல எடிட்டிங் என்று கிண்டலாக வெளியே வந்தும் ஆரியை அட்டாக் செய்துள்ளார் அர்ச்சனா. இருந்த போதும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.