Just In
- 5 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 5 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 6 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 6 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Automobiles
இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்!! எதற்காக இருக்கும்?
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரியோ தான் ரியல் வின்னர்.. வெளியேறிய அர்ச்சனாவின் ஆசை பலிக்குமா? மத்தவங்களுக்கு என்ன சொன்னாங்க?
சென்னை: தான் ஜெயிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. தன் டீம் ஆட்கள் ஜெயிக்க வேண்டும் என்றும் விளையாடி வந்த 'அன்பு' அர்ச்சனா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வழக்கம் போல அர்ச்சனாவின் எவிக்ஷனும் முன்னதாக லீக் ஆகி ஏகப்பட்ட விவாதங்களை சமூக வலைதளத்தில் கிளப்பின.
கமல்ஹாசனிடம் வந்து பேசிய பின்னர் ஹவுஸ்மேட்களை பார்த்து பேசிய அர்ச்சனா ரியோ தான் ரியல் வின்னர் என்றார்.
இந்த ஆண்டின் சிறந்த நடிகை யார்? நயன்தாரா முதல் ரிது வர்மா வரை.. டாப் 10 பட்டியல் இதோ!

அன்பு கேங்
பிக் பாஸ் வீட்டில் அன்பை வைத்து குரூபிசம் உருவாக்கி அர்ச்சனா விளையாடினார் என்கிற குற்றச்சாட்டையும் கடைசியாக, அன்பு வைத்துத்தானே விளையாடினேன் அதில் தப்பு இல்லை என அவரே ஒப்புக் கொண்டார். ஆனால், ரசிகர்கள் தொடர்ச்சியாக அன்பு கேங்கில் இருப்பவர்களை வெளியேற்றி செம ட்விஸ்ட் கொடுத்துள்ளனர்.

அப்பா சாரிப்பா
அர்ச்சனாவின் அப்பா பற்றி நிஷா பேசியதும், அர்ச்சனா பொங்கிய பொங்கலுக்கு போன வாரமே அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் முடிவு கட்டினர். ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் அதை மையமாக வைத்து குவிந்து வந்த நிலையில், நிஷாவை தொடர்ந்து இந்த வாரம் அர்ச்சனாவும் வெளியேற்றப்பட்டார். அப்பா சாரிப்பா!

சந்தோஷாம் தான்
ரியோ, ஆரி, சோமசேகர், ஷிவானி எல்லாம் சேவ் ஆன உடனே தான் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என முடிவு பண்ணி விட்டார் அர்ச்சனா. கமல்ஹாசனிடம் வந்து பேசும் போது, 40 நாட்கள் தாக்குப் பிடிப்பேனா என நினைத்தேன். ஆனால், 77 நாட்கள் வரை வந்தது ரொம்ப சந்தோஷம் தான் சார் எனக் கூறினார்.

அன்பு தான் கடவுள்
அன்பு என்பதை நீங்க ஒரு ஸ்ட்ராட்டஜியை பயன்படுத்தி விளையாடுனீங்க எங்கிற குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போறீங்க என கமல் கேட்டதும், அன்பு தான் கடவுள் அப்படின்னு நான் சொல்லல, நீங்க தான் சொன்னீங்க, அது எனக்கு தப்பா தெரியல.. சின்ன வயசுல இருந்தே என்னை பார்க்குறவஙக்ளுக்கு அது தெரியும் என்றார்.

நல்லா விளையாடுங்க
அதன் பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்களை சந்தித்துப் பேசிய அர்ச்சனா, அனிதா அழகா இருக்க என்றும், ரம்யா என்னை பார்த்துத் தான் வெட்கப்படும் என்றார். ஷிவானிக்கு கொடுத்த பாசம் உண்மை என்றும், பாலா, சோமசேகருக்கு லவ் யூவையும் சொன்னார்.

நேர்மையா ஆடுங்க ஆரி
நேர்மை.. நேர்மைன்னு சொன்னா மட்டும் போதாது, ஆரி அதனை அதிகமாக வெளிப்படுத்துங்க என ஆரி நேர்மையாக விளையாடவில்லை என்பதை குத்திக் காட்டும் விதமாக அர்ச்சனா பேசினார். சட்டென இங்க வந்தும் சண்டையை தொடர வேண்டாம் என நினைத்த அவர், சிரிச்சிட்டே இருங்க, அது தான் உங்களுக்கு அழகா இருக்கு என்று பேச்சை மாற்றினார்.

ரியல் வின்னர் ரியோ
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் போதே ரியோவை கட்டிப் பிடித்துக் கொண்டு, எனக்காக நீ டைட்டில் ஜெயிச்சுட்டு வரணும் என பேசி விட்டு சென்றார். பிளாஸ்மா டிவி வழியாக பார்க்கும் போதும், தனது கேங்கான சோம், கேபி மற்றும் ரியோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அர்ச்சனா, ரியல் வின்னர் ரியோ, டைட்டில் வின் பண்ணனும் என பேசியது ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளது.