»   »  இவங்க எல்லாம் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா?: தீயாக பரவிய பட்டியல்

இவங்க எல்லாம் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களா?: தீயாக பரவிய பட்டியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி அடைந்ததை அடுத்து தமிழிலும் அறிமுகம் செய்தனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் டைட்டிலை மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் வென்றார்.

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2

கமல் ஹாஸன் அரசியலுக்கு செல்ல உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனை சூர்யா தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் ரவுண்டு வருகிறது. அதில் உள்ள பெரும்பாலானவர்கள் விஜய் டிவி சேனலில் பணியாற்றுபவர்கள்.

டிடி

டிடி

பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி, சரவணன் மீனாட்சி டிவி தொடர் புகழ் ரச்சிதா, நடிகைகள் சினேகா, ரம்பா, நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்டோர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் நான் தான் செல்லவில்லை. இரண்டாவது சீசனில் கலந்து கொள்ள தயாராக உள்ளேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருந்துார். அவரையும் சேர்த்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போதும்யா

போதும்யா

பிக் பாஸ் முதல் சீசனே போதும்யா, இதில் இரண்டாவது சீசன் வேறயா. உங்களுக்கு புண்ணியமாக போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தாதீர்கள் என்று பலர் தெரிவித்துள்ளனர்.

English summary
A list containing twelve names is said to be the contestants of Tamil Bigg Boss 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil