»   »  ஈரம் அறிவழகனுடன் கை கோர்த்த அருண் விஜய்!

ஈரம் அறிவழகனுடன் கை கோர்த்த அருண் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் எனில் சரியான நடிகர்கள் சரியான தொழில்நுட்ப கலைஞர்கள் சரியான நேரத்தில் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் வெற்றிக் கனியைப் பறிக்க சுலபமாக இருக்கும்

அப்படி ஒரு கூட்டணியை தனது அடுத்த படத்துக்காக உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் அருண் விஜய்.

Arivazhagan to direct Arun Vijay

நடிகர் அருண் விஜய் தொடங்கிய சொந்தப் பட நிறுவனம் இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் (ஐஸ் - ICE) தனது முதல் படத்தயாரிப்புக்கு இயக்குநராக அறிவழகனை நியமித்துள்ளது.

இயக்குனர் அறிவழகன் தனது முதல் படத்திலேயே (ஈரம்) தனது குருவின் பெயரை காப்பாற்றியவர் என்பதால் நம்பிக்கையுடன் அவருடன் கூட்டணி அமைத்திருப்பதாகக் கூறுகிறார் அருண் விஜய்.

இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஜில் ஜங் ஜக் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவரும் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் இணைந்துள்ளார்.

English summary
Arun Vijay is joining hands with Arivazhagan of Eeram fame for his own production movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil