twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதியில் குரலுக்காகவே வில்லனாக மாறிய அர்ஜுன் தாஸ் - மோதிய ஜார்ஜ் மரியன்

    |

    சென்னை: கைதி திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், தன்னுடைய குரலை வைத்தே இப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், அர்ஜுன் தாஸ் இப்படத்தில் நடிக்க தயங்கியபோது, இயக்குநர் லோகேஸ் கனகராஜ் தான், தன்னை நடிக்க சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே போல் இப்படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் ஜார்ஜ் மரியன். கதையின் மையக்கருவில் எதிரியிடம் சிக்கி கொள்ளும் ஒரு பயந்த காவலர் எப்படி சில காரணங்களால் துணிச்சலான செயல்களின் மூலம் எதிரிகளை எதிர்த்து போராடுகிறார் என்பதே அந்த கதாபாத்திரம். அதை மிக சரியாக செய்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார் ஜார்ஜ் மரியன்.

    கைதி படம் தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டை பெற்றார். கைதி படத்தில் கார்த்தி தனது முழு நடிப்பையும் சரியாக வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஜார்ஜ் மரியனும் நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

    இது வேற லெவல் வெறித்தனம்.. 'தளபதி 64' ரிலீஸ் எப்போ தெரியுமா?இது வேற லெவல் வெறித்தனம்.. 'தளபதி 64' ரிலீஸ் எப்போ தெரியுமா?

    ஜார்ஜ் மரியன்

    ஜார்ஜ் மரியன்

    கைதி படத்தில் ஜார்ஜ் மரியன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் மையக்கருவில், எதிரியிடம் சிக்கி கொள்ளும் ஒரு பயந்த காவலர் எப்படி சில காரணங்களால் துணிச்சலான செயல்களின் மூலம் எதிரிகளை எதிர்த்து போராடுகிறார் என்பதே அந்த கதாபாத்திரம். அதை மிக சரியாக செய்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார் ஜார்ஜ் மரியன்.

    காமெடியில் கலக்கும் ஜார்ஜ் மரியன்

    காமெடியில் கலக்கும் ஜார்ஜ் மரியன்

    ஜார்ஜ் மரியன் ஒரு மேடை நாடக கலைஞர். ப்ரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் படத்தின் மூலம் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஜார்ஜ் மரியன் சண்டமாருதம், ஒரு கிடாயின் கருணை மனு, ஜித்தன் 2, நிமிர், பாயும் புலி, ஒரு ஊருல இரண்டு ராஜா, சரவணன் இருக்க பயமேன், காடு, தெய்வத்திருமகள், கொம்பன், காவியத்தலைவன், அம்மனி, சைவம், ஆண்டவன் கட்டளை, பசங்க 2, கலகலப்பு 2, மதராசபட்டினம், விஸ்வாசம், தடம் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

    கைதி கான்ஸ்டபிள்

    கைதி கான்ஸ்டபிள்

    இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்த படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கபட்டது. இவர் நடித்த அனைத்து படங்களிலுமே நகைச்சுவைத் தன்மை மிக்க கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்திருப்பார். இவரை நாம் அனைத்து படங்களிலுமே காமெடி கதாபாத்திரத்திலேயே பார்த்து வந்தோம் ,தற்போது கைதி படத்தில் ஒரு சரியான குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மையை சொல்வதென்றால். அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி இருப்பார்.

    வில்லன் அர்ஜுன் தாஸ்

    வில்லன் அர்ஜுன் தாஸ்

    அதேபோல், இந்தப் படத்தில் மற்றொரு கவனிக்கத்தக்க கதாபாத்திரம் வில்லன் அர்ஜுன் தாஸ். குறிப்பாக அவரின் குரலுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் தற்போது தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கைதி படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    குரலுக்கு கிடைத்த வாய்ப்பு

    குரலுக்கு கிடைத்த வாய்ப்பு

    இப்படத்தில் தன் குரலை வைத்தே தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார் அர்ஜீன் தாஸ். அர்ஜீன் தாஸ் இந்த படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்.ஜே வாக இருந்தேன் என்றும் கூறியிருந்தார். அர்ஜீன் தாஸ் முதலில், இப்படத்தில் நடிக்க தயங்கியதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் தன்னை நடிக்க சம்மதிக்க வைத்தார் என்றும் கூறியிருக்கிறார்.

    கைதி வில்லன்

    கைதி வில்லன்

    படத்தில் தான் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்தற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான் என்றும் கூறியிருக்கிறார். படத்தில் பல சண்டைக்காட்சிகளில் தனக்கு அடிபட்டதாகவும், அதற்காக மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறினார். கைதி படத்தை முதல் காட்சி பார்க்கும் போது இவரின் குரலுக்கு திரையரங்கில் மிக நல்ல வரவேற்பு இருந்ததை நேரில் கண்டதாகவும், இரண்டாம் பாதியில் இருந்து திரையரங்கிற்கு வந்த மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதாக கூறியிருந்தார். அர்ஜுன் தாஸ் அடுத்ததாக கும்கி 2 மற்றும் அந்தகாரம் படங்களில் நடிக்க உள்ளார்

    English summary
    Arjun Das, who played the villainous character in the film Kaithi, said that he got the opportunity based on his voice. Also, when Arjun Das hesitated to act in the film, director Lokes Kanagaraj said that he had agreed to act in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X