»   »  சல்மான் கான் கார் விபத்துதான்.. அர்ஜூன் கன்னடத்தில் நடித்த "கேம்" படத்தின் கதையாமே?

சல்மான் கான் கார் விபத்துதான்.. அர்ஜூன் கன்னடத்தில் நடித்த "கேம்" படத்தின் கதையாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: குப்பி உள்ளிட்ட படங்களை இயக்கியவரான கன்னடத்து ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் உருவாகி அர்ஜூன் சர்ஜா (அதாவது நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்) ஹீரோவாக நடித்துள்ள கேம் படத்தின் கதை, சல்மான் கான் கார் விபத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சலசலப்பு எழுந்துள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது கேம். இது சல்மான் கானின் வாழ்க்கையில் பெரும் டென்ஷனை ஏற்படுத்திய கார் விபத்து சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா, ஷாம் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் இப்படம் ஒரு மெல்லிய கோடு என்ற பெயரில் வருகிறது.

வாழ்கைக் கதையா?

வாழ்கைக் கதையா?

சல்மான் கானின் வாழ்க்கைச் சம்பவமா இப்படத்தின் கதை என்பது குறித்து இதுவரை படக் குழுவினர் எதையும் கூறவில்லை. இருப்பினும் கதை அதுதான் என்று அடித்துக் கூறுகின்றனர் கன்னடத் திரையுலகினர்.

டிரெய்லர் ஹிட்

டிரெய்லர் ஹிட்

இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளது. பெருத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் மூலம் கன்னடத்திற்குத் திரும்பியுள்ளார் மனீஷா கொய்ராலா.

குப்பி இயக்குநர்

குப்பி இயக்குநர்

இயக்குநர் ரமேஷுக்கு நிஜ வாழ்க்கைச் சம்பவங்களைப் படமாக்குவது என்பது புதிதல்ல. ஏற்கனவே குப்பி, அட்டகாசா ஆகிய படங்களை இவர் இயக்கிய அனுபவம் கொண்டவர். அட்டகாசா, வீரப்பன் வேட்டை தொடர்பான கதையாகும். அதில் போலீஸ் அதிகாரி விஜயக்குமார் வேடத்தில் அர்ஜூன் நடித்திருந்தார்.

சுனந்தா கதையா?

சுனந்தா கதையா?

முன்பு இப்படத்தின் கதை சுனந்தா புஷ்கர் - சசி தரூர் கதை என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது சல்மான் கான் கார் விபத்து கதை என தகவல்கள் கூறுகின்றன.

தமிழ், கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இப்படம் ஒரே சமயத்தில் வெளியாகிறது.

English summary
AM Ramesh's upcoming suspense thriller 'Game' to portray real life incidents of Sallu Bhai! The movie stars Acting King Arjun Sarja, Manisha Koirala and Shaam in the lead roles. The movie is being relased in Tamil too with the name Oru Melliya Kodu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil