»   »  ரஜினி - ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்?

ரஜினி - ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் அர்னால்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி - ஷங்கர் இணையும் மெகா படத்தில், இன்னொரு பெரிய நடிகரும் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா...

அந்த இன்னொரு நடிகர் என முதலில் கமல் ஹாஸனை் என்றார்கள், பின்னர் ஆமீர்கான் என்றார்கள், அடுத்து விக்ரம் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறவர்... ஹாலிவுட் மெகா ஸ்டார் அர்னால்ட் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.

ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்ட அர்னால்ட்

ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்ட அர்னால்ட்

ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக அர்னால்ட் சென்னை வந்திருந்தார். அப்போது அவருடன் ஷங்கருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அப்போது மேடையிலேயே தமிழில் தனக்கும் ஒரு வாய்ப்புத் தருமாறு ஷங்கரிடம் அர்னால்ட் கேட்டது நினைவிருக்கலாம்.

சம்மதம்

சம்மதம்

அதை வைத்து ஷங்கரும் இப்போது அர்னால்டை அணுகியிருக்கிறாராம். ரஜினிக்கு இணையான பாத்திரத்தில் அர்னால்ட் நடிக்கப் போகிறாராம். அர்னால்டும், இந்தியாவில் தனக்காக உள்ள ரசிகர் கூட்டத்தை மனதில் வைத்து நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல்.

365 நாட்கள் ஷூட்டிங்...

365 நாட்கள் ஷூட்டிங்...

சுமார் இரண்டாண்டுகள் நடக்கவிருக்கும் அந்தப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பு மட்டும் ஓராண்டு நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் அர்னால்டு இருபத்தைந்து நாட்கள் வரை நடிப்பார் என்கிறார்கள். இதை ரஜினியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

உலகளவில்..

உலகளவில்..

இந்தப் படத்தில் ரஜினி - அர்னால்ட் நடிப்பதன் மூலம் அந்தப் படத்தின் மார்க்கெட் சர்வதேச அளவில் பரந்து விரியும் என்பதோடு, உலகளவில் பாரமவுண்ட் மாதிரி பெரிய நிறுவனங்கள் படத்தை வெளியிடும் வாய்ப்பும் கிடைக்கும். அதன் மூலம் தமிழ்ப் படம் ஒன்றை ஹாலிவுட் நிறுவனம் உலகளவில் வெளியிடுவது முதல் முறையாக அமையும்.

English summary
Sources reveal that Hollywood Mega star Arnold Schwarzenegger may be playing a crucial role in Rajini - Shankar's next mega budget movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos