twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோசடி வழக்கு.. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிரபல நடிகருக்கு நீதிமன்றம் கொடுத்த வித்தியாச தண்டனை!

    By
    |

    கொச்சி: மோசடி வழக்கில் பிரபல நடிகருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Recommended Video

    Vijay யை சீண்டும் Meera Mithun, கொதிக்கும் ரசிகர்கள்.

    பிரபல மலையாள நடிகர் ரிஸாபவா. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர், தமிழில் ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடித்த தென்றல் வரும் தெரு, காசு உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

    டாப் ஹீரோ நடிக்க.. சினிமாவாகிறது கேரள விமான விபத்து சம்பவம்.. கிராபிக்ஸில் அதை பண்ணப் போறாங்களாம்! டாப் ஹீரோ நடிக்க.. சினிமாவாகிறது கேரள விமான விபத்து சம்பவம்.. கிராபிக்ஸில் அதை பண்ணப் போறாங்களாம்!

    மலையாள டப்பிங்

    மலையாள டப்பிங்

    சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக ஆசிப் அலி, இந்திரஜித் நடித்த கோகினூர் என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் உள்பட பல பிறமொழி நடிகர்களுக்கு மலையாள டப்பிங்கும் பேசி வருகிறார். கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகர் இவர்.

    திரும்பியது காசோலை

    திரும்பியது காசோலை

    இவர், எலம்காரா என்ற பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 2014 ஆம் வருடம் இந்த தொகையை அவரிடம் வாங்கியுள்ளார். அதற்காக அவருக்கு காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து சாதிக், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ரிஸாபவா மீது வழக்குத் தொடர்ந்தார்.

    பிடிவாரண்ட்

    பிடிவாரண்ட்

    நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரிஸாபவாவுக்கு கெடு விதித்திருந்தது. ஆனால், அதற்குள் அவர் பணத்தைக் கட்டவில்லை. பணத்தைக் கட்டாததால் அவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி இருக்க வேண்டும். ஆனால், அவர் ஆகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக, பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    வித்தியாசமான தண்டனை

    வித்தியாசமான தண்டனை

    இந்நிலையில், நடிகர் ரிஸாபவா நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றம் கூறியபடி ரூ.11 லட்சம் பணத்தை அவர் செலுத்தினார். ஆனால், நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்தை அவர் மீறியதால் அவருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை அளித்தது. அதாவது, நீதிமன்றம் முடியும் வரை அறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை அளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Cheque bounce case: Actor Rizabawa surrenders, court asks him to stand in court till adjourned
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X