வாரிசு பிரச்சனை முடிவுக்கு வரும்... ஆர்ட் டைரக்டர் வீராசமர் விளக்கம்!

சென்னை : வாரிசு திரைப்படம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வெளியாகும் என ஆர்ட் டைரக்டர் வீராசமர் தெரிவித்துள்ளார்.

ஆர்ட் டைரக்டர் வீராசமர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் ஆர்ட் டைரக்டராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த படத்திலேயே டிரைவராக ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகராகவும் மாறினார்.

அந்த திரைப்படத்தைதொடர்ந்து வெயில், பூ, பாண்டி, முத்துக்கு முத்தாக, வேலாயுதம், கொம்பன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர், பயணம் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

டைரக்டர் வீராசமர்

டைரக்டர் வீராசமர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள டிஎஸ்பி படத்தில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ள வீராசமர் அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வீராசமர் தனது வாழ்க்கையில் சினிமா பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

விஜய் அதிகமா பேசமாட்டார்

விஜய் அதிகமா பேசமாட்டார்

விஜய் சார், அஜித் சார் படங்களில் ஆர்ட் டைக்டரா வேலை செய்ததுஇல்லை, ஆனால் உதவி இயக்குநராக வேலை செய்து இருக்கிறேன். சிட்டிசன், ரெட் படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்து இருக்கிறேன். விஜய் தமிழன் படத்தில் வேலை செய்து இருக்கிறேன். இரண்டு பேரின் படங்களிலும் வேலை செய்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். ஆனால், விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமா பேசவே மாட்டாரு அமைதியாகத்தான் இருப்பாரு. வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியாகனும், இரண்டு படங்களும் ஹிட்டாகனும் என்பதுதான் என் ஆசை.

வாரிசு சிக்கல்

வாரிசு சிக்கல்

வாரிசு படத்திற்கு தெலுங்கு திரைப்படத்துறையில் எழுந்துள்ள சிக்கலுக்கு பதிலளித்த ஆர்ட் டைரக்டர் வீராசமர், ஹாலிவுட் படங்களை வியந்து பார்த்துக்கொண்டு இருந்த நாம், நம் படங்களை திரும்பிபார்க்க வைத்துள்ளோம். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த சினிமா இப்போது பெரியவட்டத்திற்குள் வந்துள்ளது.

பிரிவினை வரக்கூடாது

பிரிவினை வரக்கூடாது

இதனால், இந்தியாவிற்குள் ஒன்றுமை இருக்க வேண்டும் யார் படங்கள் வந்தாலும் அதை தடுக்காமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செயல்பட வேண்டும். விஜய் சார் படம் அங்கு வெளியானாலும், இங்கு தெலுங்கு நடிகர்களின் படம் வெளியாகும் போதும் நாம் அதே ஒத்துழைப்பை தரவேண்டும். நமக்குள் தமிழ், தெலுங்கு என்ற பிரிவினை இருக்கக்கூடாது அனைத்து படங்களையும் நாம் பார்க்க வேண்டும். அப்போது தான் ஹாலிவுட்டில் நம் படத்தை பார்ப்பார்கள். வாரிசு திரைப்படம் சிக்கல் இல்லாமல் விரைவில் வெளியாகும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்ட் டைரக்டர் வீராசமர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X