Don't Miss!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- News
நீட் விபரீதம்.. 1311 முதுகலை மருத்துவ இடங்கள் வீண்.. மத்திய அரசுக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்
- Technology
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- Finance
சாமானிய மக்களின் முதலீடு என்னவாகும்.. அதானி குழுமத்தில் எஸ்பிஐ, எல்ஐசி-ன் நிலை என்ன?
- Lifestyle
கக்கா போக முடியாம ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க... உடனே சரியாகிடுமாம்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒவ்வொருத்தரும் கோபப்படணும்.. நாளை வெளியாகும் சினம் படம்.. மிரட்டலான ஸ்னீக் பீக் இதோ!
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சினம். யானை படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பாலக் லால்வானி.
படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கியுள்ளார் அருண் விஜய். அவர் இதுபோன்ற கேரக்டர்களில் மிகவும் சிறப்பாக நடிப்பார்.
சுடுகாட்டில்
சாப்பிட்ட
அருண்
விஜய்
படக்குழுவினர்...
நடிகர்
காளி
வெங்கட்டின்
நகைச்சுவையான
அனுபவம்

நடிகர் அருண் விஜய்
டிகர் அருண் விஜய் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியானது யானை படம். கிராமத்து கதைக்களத்தில் கமர்ஷியலை புகுத்தி சிறப்பாக கொடுத்திருந்தார் இயக்குநர் ஹரி. ஹரி மற்றும் அருண் விஜய் இந்தப் படத்தில் முதல்முறையாக இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினம் படம்
இதனிடையே அருண் விஜய்யின் அடுத்தப்படம் சினம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பாலக் லால்வானி. படத்தை ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு கேஸை துப்பு துலக்குகிறார் அருண் விஜய்.

அதீதமான கோபம்
மூத்த அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்த முற்படும்போது அவரது கோபம் அதீதமாக வெளிப்படுகிறது. இதை முன்னதாக வெளியான படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர்களில் காண முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருத்தரும் கோபப்படணும்
இதில் ஒவ்வொருத்தரும் கோபப்பட வேண்டும் என்று கூறுகிறார் அருண் விஜய். அவர் கோபப்படும் தருணங்களை, காட்சிகளை கொண்டு இந்த ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது. இதனிடையே நாம் அன்றாடம் கடந்து போகும், நம்மை பாதிக்கும் விஷயங்களை மையமாக வைத்துதான் சினம் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக குமரவேலன் தெரிவித்துள்ளார்.

அருண் விஜய் குறித்த பாராட்டு
மேலும் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்தப் படத்தில் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்ற நடிகர்கள் சாங் சீக்வொன்ஸ் எடுக்கும்போதுதான் உற்சாகமாக நடிப்பார்கள், ஏனென்றால் அதில்தான் எளிதாக நடிக்க முடியும். ஆனால் அருண் விஜய் பைட் காட்சிகளில் நடிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார் என்றும் குமரவேலன் கூறியுள்ளார்.

தள்ளிப் போன ரிலீஸ்
இந்தப் படத்தை நடிகர் விஜய்குமாரே தயாரித்துள்ளார். இதனிடையே கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் கடந்த 2 ஆண்டுகளாக ரிலீசாகாமல் தள்ளிப் போனதாகவும் குமரவேலன் குறிப்பிட்டுள்ளார். அருண் விஜய்யின் யானை படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்த நிலையில், இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.