»   »  மீசையில மண்ணு ஒட்டலையே: சூப்பரா சமாளித்த அரவிந்த் சாமி

மீசையில மண்ணு ஒட்டலையே: சூப்பரா சமாளித்த அரவிந்த் சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சதுரங்க வேட்டை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உணர்ந்த அரவிந்த் சாமி சூப்பராக சமாளித்துவிட்டார்

அரவிந்த் சாமி, த்ரிஷா நடிக்கும் சதுரங்க வேட்டை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. ஒரு போஸ்டரில் த்ரிஷா மட்டும் இருக்கிறார். மற்றொரு போஸ்டரில் அரவிந்த் சாமி மட்டும் உள்ளார்.


Arvind Swami is not only handsome but also clever

இன்னும் ஒரு போஸ்டரில் அரவிந்த் சாமியும், த்ரிஷாவும் சேர்ந்து உள்ளனர். அதில் அரவிந்த்சாமியின் கையில் பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன.


இதை பார்த்த மக்கள் இது என்ன அரவிந்த்சாமி செல்லாத நோட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் என்று கலாய்க்கத் துவங்கினர். ஆனால் அரவிந்த் சாமியோ தன்னைத் தானே கலாய்த்து சூப்பராக சமாளித்துவிட்டார்.


செல்லாத நோட்டுகளுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது,நோட்டை மாற்ற வங்கி கவுண்ட்டரில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.


English summary
Sathuranga Vettai 2 hero Arvind Swami has cleverly used his movie's firstlook poster to talk about the demonitising of Rs.1000 notes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil