»   »  அகோரியைத் தொடர்ந்து ஆதிவாசியாக மாறும் ஆர்யா... மஞ்சப்பை ராகவனுக்காக!

அகோரியைத் தொடர்ந்து ஆதிவாசியாக மாறும் ஆர்யா... மஞ்சப்பை ராகவனுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மஞ்சப்பை புகழ் ராகவனின் அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா பழங்குடி இனத்தவராக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளும் ஹிட் படங்கள் எதையும் ஆர்யா கொடுக்கவில்லை என்பது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

Arya to play a Tribal in his Next

இப்படியே போனால் தமிழ் சினிமாவில் காணாமல் போகும்படியான சூழ்நிலை உருவாகும் என்று லேட்டாகத் தெரிந்து கொண்ட ஆர்யா தற்போது அழுத்தமான வேடங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.

அதன்படி மஞ்சப்பை புகழ் ராகவனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டிருக்கிறார்.கதைப்படி இதில் ஆர்யா பழங்குடி இனத்தவராக நடிக்கப் போகிறாராம்.

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அதிரப்பள்ளி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நடைபெறவுள்ளது.

கும்கி பாணியிலான இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயனையும், இசையமைப்பாளராக யுவனையும் ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவெடுத்திருக்கிறதாம்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Arya Next Team Up with Manja Pai Director Raghavan and He is Play a Tribal in this Film.The Official Announcement can be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil