ஆர்யா கல்யாணம் கேள்விக்குறி?- வீடியோ
யாழ்ப்பாணம் : நடிகர் ஆர்யா, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திருமணத்திற்குப் பெண் தேடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 16 பெண்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் ஷூட்டிங், இலங்கையில் உள்ள நூலகம் ஒன்றில் தடையை மீறி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
எங்க வீட்டு மாப்பிள்ளை
ஆர்யா, க்லர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். ஆர்யாவை கரம்பிடிக்கும் ஆசையில், 16 பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தேர்ந்தெடுக்கும் ஆர்யா
தனக்கு சரியான வாழ்க்கைத் துணையாக இருக்க மாட்டார் என்று தோன்றும் பெண்களை, ஆர்யா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகிறார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெறும் 4 போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர்.
வீட்டிற்கே செல்லும் ஆர்யா
அந்த 4 பெண்களின் வீடுகளுக்கும் சென்று நடிகர் ஆர்யா அவர்கள் குடும்பத்துடன் பழகி வருகிறார். நான்கு போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த சுசானாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சுசானா கனடாவில் செட்டில் ஆகிவிட்டாலும், அவரின் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு ஆர்யா சென்றுள்ளார்.
சர்ச்சை
யாழ்ப்பாணத்தில் இருக்கும் நூலகத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அவர்கள் முறையான அனுமதி இல்லாமல் நூலகத்திற்குள் ஷூட்டிங் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே, சுசானாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இலங்கையில் அனுமதியின்றி நடந்த படப்பிடிப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.