ஆர்யான் கானுக்கு ஜாமின் கிடைக்குமா... ட்விட்டரில் டிரெண்டிங் ஆன ஹாஷ்டேக்
மும்பை : ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யான் கான், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் அக்டோபர் 1 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்களின் பிள்ளைகள் கலந்து கொண்ட பார்ட்டி நடந்தது. இதில் நுழைவுக் கட்டணமே லட்சங்களில் கட்ட வேண்டும். இந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது போலீசார் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது.

ஷாருக்கான் மகன் கைது
இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்யானின் வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆர்யானுக்கு ஜாமின் வழங்க போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மன உளைச்சலில் ஷாருக்
போலீஸ் காவலில் இருக்கும் ஆர்யானை ஜாமினில் எடுக்க ஷாருக்கான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் பலர் ஷாருக்கானை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதால் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என ஷாருக்கான் கேட்டுக் கொண்டார்.

வீட்டிலேயே முடங்கிய ஷாருக்கான்
அனைவரும் விசாரிப்பதால் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அனைத்து படங்கள் மற்றும் விளம்பரங்களின் ஷுட்டிங்கை ஷாருக்கான் ரத்து செய்துள்ளார். ஏற்கனவே ஆர்யான் கைது செய்யப்பட்டதுமே தனது ஸ்பெயின் ஷுட்டிங்கை ரத்து செய்து விட்டு, மும்பை திரும்பிய ஷாருக்கான் போலீசாரிடம் அனுமதி பெற்று, மகனை இரண்டு நிமிடங்கள் மட்டும் பார்த்து பேசினார்.

டிரெண்டிங்கில் ஆர்யான் கான்
இந்நிலையில் ஆர்யானின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக AryanKhanBail என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

எதிர்க்கும் நெட்டிசன்கள்
இதற்கு எதிராக ஆர்யானுக்கு ஜாமின் கிடைக்க கூடாது என நெட்டிசன்கள் சிலர் NoBailOnlyJail என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி, அதையும் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதில் பலர் விஐபி என்பதற்காக எந்த ஸ்பெஷல் சலுகையும் காட்டாமல் மற்றவர்களை போலவே சிறையில் நடத்த வேண்டும் என பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மீம்களையும் நெட்டிசன்கள் உருவாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications