twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்க.. மும்பை நீதிமன்றத்தில் முறையிட்ட ஷாருக்கானின் மகன்!

    |

    மும்பை: சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    தனது மகனை காப்பாற்ற ஷாருக்கான் எடுத்துக் கொண்ட சட்ட போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்த நிலையில், ஆர்யான் கான் ஜாமினில் வெளி வந்தார்.

    வழக்கை விசாரித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஆர்யான் கான் குற்றமற்றவர் எனக் கூறிய நிலையில், தனது பாஸ்போர்ட்டை திருப்பிப் பெற மும்பை நீதிமன்றத்தை அவர் நாடி உள்ளார்.

    Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ! Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!

    பாலிவுட்டில் போதைப் பொருள்

    பாலிவுட்டில் போதைப் பொருள்

    நாடு முழுவதும் போதைப் பொருள் விவகாரத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். பாலிவுட்டில் போதைப் பொருளின் புழக்கம் தலை விரித்து ஆடி வரும் நிலையில், முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கும் போதைப் பொருள் தான் காரணம் என விசாரணை தொடங்கிய நிலையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

    ஷாருக்கான் மகன்

    ஷாருக்கான் மகன்

    பாலிவுட் பிரபலங்களை தாண்டி நடிகர் ஷாருக்கானின் வாரிசான ஆர்யான் கான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு பார்ட்டி கொண்டாடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தனது மகனை மீட்க சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொண்ட ஷாருக்கானின் முயற்சிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 28ம் தேதி 2021ல் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

    பாஸ்போர்ட் முடக்கம்

    பாஸ்போர்ட் முடக்கம்

    ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக் கூடாது என்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நிதின் சாம்ப்ரே ஆர்யான் கானின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டு நிபந்தனை ஜாமின் வழங்கினார். ஆனால், அதன் பிறகு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆர்யான் கானுக்கும் இந்த வழக்கில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்த நிலையில், அவர் குற்றமற்றவர் என Clean Chit வழங்கப்பட்டது.

    Recommended Video

    Shabana Aryan விவாகரத்து!!! Rumors-கு முற்றுபுள்ளி வைத்த Shabana | Bakkiyalakshmi, Sembaruthi
    பாஸ்போர்ட் வேண்டும்

    பாஸ்போர்ட் வேண்டும்

    இந்நிலையில், மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் தனது பாஸ்போர்ட்டை திரும்பத் தரக் கூறி ஆர்யான் கான் முறையிட்டுள்ளார். இதுதொடர்பான விளக்கத்தை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் அளிக்க வேண்டும் என செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு மே 27ம் தேதி தான் அவர் குற்றமற்றவற்றவர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Aryan Khan requests Mumbai court for return of his passport. Mumbai Sessions Court orders NCB to file the reason and proceducers in this matter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X