Just In
- just now
திடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்
- 3 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 7 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 8 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
Don't Miss!
- News
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!
- Sports
பிரேக் கொடுத்த தமிழக வீரர்.. மாயம் நிகழ்த்திய சிராஜ்.. திணறும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. டிவிஸ்ட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'பாவக் கதைகளி'ல் திருநங்கை கேரக்டர்.. பாராட்டு மழையில் காளிதாஸ் ஜெயராம்.. செம ஹேப்பி!
சென்னை: மூன்றாம் பாலினத்தவர் கேரக்டரில் என் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என காளிதாஸ் ஜெயராம் கூறியுள்ளார்.
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த 18 ஆம் தேதி வெளியான ஆந்தாலஜி படம், பாவக் கதைகள்.
மாஸ்.. கிளாஸ்.. சைக்கோ வில்லன்கள்.. 2020ல் ரசிகர்களை அலற விட்ட வில்லாதி வில்லன் யார்?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இயக்கிய படங்கள் இதில் இடம்பெற்றன/

சுதா கொங்கரா
ஆணவக் கொலையை மையமாக வைத்து இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டன. சுதா கொங்கராவின் தங்கம் கதை, காதலுக்கு உதவும் மூன்றாம் பாலினத்தவரின் மன உணர்வு மற்றும் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்கிற வலியை அழுத்தமாகச் சொல்லி இருந்தது.

என்ன செய்கிறது
விக்னேஷ் சிவனின் லவ் பண்ணா உட்ரணும் படம் காதலுக்கு எதிரான ஜாதி தலைவரின் அடாவடியை பேசுகிறது. கவுதம் மேனன் இயக்கி இருக்கும் வான் மகள், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட மகளை, சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்காக குடும்பம் என்ன செய்கிறது என்பதை சொல்கிறது.

ஆணவக் கொலை
வெற்றி மாறனின் ஓர் இரவு, ஜாதி திமிறால் பெற்ற மகளையே ஆணவக் கொலை செய்யும் கொடுமைக்கார அப்பாவை பற்றிய கதை. இந்த கதைகளில், தங்கம் கதையில், காளிதாஸ் மூன்றாம் பாலினத்தவராக சிறப்பாக நடித்திருந்தார். இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:

மகிழ்ச்சியா இருக்கு
சத்தார் என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்ததும், சிறப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அது நாடகத்தனமாக ஆகிவிடக்கூடாது என்று நினைத்தேன். அதன்படியே நடித்தேன். இப்போது படத்தை பார்த்துவிட்டு பலர் என் நடிப்பை பாராட்டினார்கள். பாராட்டி வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு கூறியிருக்கிறார்.