பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் இவர் தானா?... அடுத்தடுத்த பிரோமோவால் லீக்கான சீக்ரெட்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள பிக் பாஸ் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின், சாந்தி, அசீம், ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்டன், ரச்சித்தா, ராம் ராமசாமி, ஏடிகே, மகேஸ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன்,மைனா என 21 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

காரசாரமான சண்டையுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு நாட்களில் முடிய உள்ளதால், சோஷியல் மீடியாவின் ஒட்டுமொத்த பார்வையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது திரும்பி உள்ளது.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தழிழில் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ள நிலையில், 6வது சீசனும் இன்னும் இரண்டு நாளில் முடிவடைய உள்ளது. சண்டை,அழுகை, நட்பு, காதல், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு சுவாரசிய கலவையாக இந்த நிகழ்ச்சி இருந்தது.

கலகலப்பான சீசன்

கலகலப்பான சீசன்

அசீமின் கடுமையான வார்த்தைகள், விக்ரமனின் புரட்சிகரமான சிந்தனை பேச்சு, ஷிவினின் தைரியம், மைனா, அமுதவாணனின் பழங்காலத்து ஜோக், ஏடிகேவின் ரேப் பாடல், ஜனனியின் கொஞ்சும் இலங்கை தமிழ், மெட்டி ஒலி சாந்தியின் உப்புமா சமையல், ரச்சித்தா ராபர்ட் மாஸ்டரின் ரொமான்ஸ், சிரித்த முகத்துடன் இருந்து பெண் ரசிகர்களை வளைத்துப்போட்ட கதிர் என இந்த சீசன்6 கலவையாகவே இருந்தது.

நான்கு டாப் போட்டியாளர்கள்

நான்கு டாப் போட்டியாளர்கள்

கடந்த வாரம் ஏடிகே நாமினேஷனில் சிக்கி வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன்,ஷிவின்,மைனா, கதிர்,அமுதவாணன் ஆகியோர் இருந்தனர். 100வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் பணமூட்டை வந்ததும், 3 லட்சம் ரூபாய் பணத்துடன் கதிர் வெளியேறினார். இதையடுத்து, இரண்டாவது முறையாக வந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன்,ஷிவின், மைனா உள்ளிட்டோர் உள்ளனர்.

அடுத்தடுத்த பிரோமோ

அடுத்தடுத்த பிரோமோ

இந்நிலையில், நான்கு டாப் போட்டியாளர் ஏவி வீடியோவை பிக் பாஸ் வெளியிட்டுள்ளது. அதில் நேற்று அமுதவாணனின் ஏவியை முதலில் வெளியிட்டது. அடுத்ததாக மைனா நந்தினியின் வீடியோவையும், அதன் பின் ஷிவின் கணேசனில் வீடியோவை வெளியிட்டது. இதையடுத்து, மக்களின் மனம் கவர்ந்த அசீமின் வீடியோவை வெளியிட்டு, கடைசியாக விக்ரமன் வீடியோவை வெளியிட்டது.

யார் யாருக்கு என்னென்ன இடம்

யார் யாருக்கு என்னென்ன இடம்

இந்த அடுத்தடுத்த பிரோமோவைப் பார்த்த நெட்டிசன்ஸ், பிரோமோவிலே சீக்ரெட்டா யார் யாருக்கு என்ன இடம் என்பதை சொல்லீட்டீங்களே என்று கேட்டு வருகின்றனர். விக்ரமன் நிச்சயம் டைட்டிலை வெல்லுவார், அசீமுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாவது இடமும், நான்காம் இடம் மைனாவுக்கு கிடைப்பது கன்பார்ம் என்று பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X