மீண்டும் ஆரம்பித்த அசீம்..ஏய் நீ பெண்ணா? என கேள்வி? கடுப்பான தனலட்சுமி

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் பெரும் புயலை கிளப்பிய அசீம் மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளார்.

கடந்த வாரம் பெண் போட்டியாளர்களை வாடி போடி என்று பேசி அதிகமான ரெட் கார்டுகளை வாங்கி மன்னிப்பு கேட்டார் அசீம்.

அதன் பின் ஓரிரு நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் தனது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். இன்று மீண்டும் தனலட்சுமியை கண்டபடி பேசினார்.

வெளிப்படும் கொடூர குணம்

வெளிப்படும் கொடூர குணம்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை மோதவிடுவதும் அவர்களுடைய மனநிலையை சோதிப்பதும், முக்கிய டாஸ்குகளை கொடுத்து சோதிப்பது வழக்கம். இதனால் போட்டியாளர்கள் செயற்கையாக நடிப்பதை விட்டுவிட்டு தங்கள் இயல்பு மனநிலையை காட்ட வேண்டி வரும். பொறுமையாக இருப்பது போல், நல்லவர் போல் நேர்மையானவர் போல் காட்டிக் கொள்பவர்கள் இது போன்ற போட்டிகளில் தங்களை யார் என்று வெளிப்படுத்தி விடுவார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் கூடும். ஆனால் சிலர் எல்லாவற்றையும் மீறி தங்களுடைய கொடூர குணத்தையும் வார்த்தைகளை விடுவதையும் பார்க்கலாம். இதுவும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும்.

பொம்மை போட்டி அடிதடியில் முடிந்தது

பொம்மை போட்டி அடிதடியில் முடிந்தது

நேற்று பிக் பாஸ் வீட்டில் புது வகையான போட்டி ஒன்றை அறிவித்தார். ஏற்கனவே கடந்த சீசன்களில் நடத்தப்பட்ட போட்டி தான் லேசாக மாற்றப்பட்டு நடக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர் பெயர் பொறிக்கப்பட்ட பொம்மையையும் மற்றவர் ஓடிச் சென்று வைத்து காப்பாற்ற வேண்டும். ஆனால் இதில் பிக்பாஸ் வீட்டில் நேற்று இந்த போட்டியினால் கடும் பிரச்சனை எழுந்தது. ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு மோதிக்கொண்டு இருந்தனர் சிலர் நேர்மையாக விளையாடினார் இந்த போட்டியில் பெண் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடியதை காணமுடிந்தது. சிலர் பொறுமையிழந்து நடந்ததை காண முடிந்தது. குழு குழுவாக கோஷ்டியாக சேர்ந்து கொண்டு விளையாடியதை காண முடிந்தது.

தேவையில்லாமல் தனலட்சுமியை வம்பிழுத்த அசீம்

தேவையில்லாமல் தனலட்சுமியை வம்பிழுத்த அசீம்

மற்றொருபுறம் போட்டியில் பங்கேற்ற அசீம் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மீண்டும் பேசியதை காண முடிந்தது. மணிகண்டன் நேற்று அவதூறான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் நேற்று அசீம் தனது சுய ரூபத்தை மீண்டும் காட்டத் தொடங்கினார். தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் தனலட்சுமியிடம் வம்புக்கு போனதும், ஆயிஷாவை நீ தள்ளிவிட்டாய் என்று குரூப் சேர்க்கும் வேலையில் செயல்பட்டதும் நடந்தது. ஆனால் ஆயிஷா அப்படி என்னை தள்ளிவிட்டதாக ஞாபகம் இல்லை என்று இந்த பிரச்சனையை எளிதாக முடித்துவிட்டு அசீம் முகத்தில் கரியை பூசினார். ஆனாலும் அசீம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனை கிளப்பிக் கொண்டே இருந்தார்.

தனலட்சுமியை கண்டபடி திட்டிய அசீம்

தனலட்சுமியை கண்டபடி திட்டிய அசீம்

ஒரு கட்டத்தில் பொம்மைகளை வைக்கப் போகிறவர்களுக்கும் எதிர் டீமுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் ஷெரின் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்தனர். தள்ளிவிட்டது ஜனனி என்றாலும் வழக்கம் போல் அசீம் தனலட்சுமி என மீண்டும் தகராறை ஆரம்பித்தார். "என்ன செய்ற தனலட்சுமி? நீயும் ஒரு பெண் தானே? உனக்கு அறிவு இல்லையா? எப்படி இப்படி தள்ளிவிட்டாய், உன்னுடைய இந்த கோபத்தையெல்லாம் வெளியே போய் வச்சுக்கோ" என்றெல்லாம் கண்டபடி பேசினார். அசீமின் இந்த பேச்சு மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது. ஏற்கனவே இதற்கு முன் நடந்த ஒரு டாஸ்க்கில் வாடி போடி என்று கண்டபடி பேசி கண்டிக்கப்பட்டார். மன்னிப்பும் கேட்டார்.

தனியாக விளையாட முடியாமல் கோஷ்டி சேர்க்கும் அசீம்

தனியாக விளையாட முடியாமல் கோஷ்டி சேர்க்கும் அசீம்

அசீமால் தனியாக விளையாட முடியாது, காலந்தள்ள முடியாது என்பதால் கோஷ்டி சேர்க்கும் வேலையிலும், தன்னை தட்டிக்கேட்ட தனலட்சுமியை ஓரங்கட்டவும் ஷெரினா கீழே விழுந்ததை திசைத்திருப்பி பெரும்பாலானோரிடம் தனலட்சுமி வேண்டுமென்றே தள்ளிவிட்டார் என கதை கட்டி நீயெல்லாம் ஒரு பெண்ணா என கேள்வி எழுப்பினார். ஆனால் விஷுவலில் பார்க்கும்போது தனலட்சுமி ஷெரினை விட்டு தள்ளி இருந்தார். அவரும் கீழே விழுந்தார். இதை திசைத்திருப்பி கோஷ்டி சேர்ந்து கதை கட்டிவிட்டதை காணமுடிந்தது.

ஆணாதிக்க அசீம்.. புலம்பிய தனலட்சுமி

ஆணாதிக்க அசீம்.. புலம்பிய தனலட்சுமி

இது பற்றி பேசிய தனலட்சுமி நான் யாரையும் தள்ளிவிடவில்லை, இந்த வாரம் கமல் சார் முன் கேமராவில் அதை பார்த்து உறுதிப்படுத்துவேன். அப்படி நான் தவறு செய்திருந்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அனைவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள், என்னை திட்டியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அசீம் இவர் என்னை என்ன என்று கேட்கிறார் நீ ஒரு பெண்ணா? என்று கேட்கிறார். உனக்கு அறிவு இருக்கா என்று கேட்கிறார். எனக்கு திருப்பி கேட்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கோபமாக ஷிவினிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் அசீம் ஆணாதிக்கப் போக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக இந்த வாரமும் அவர் கண்டிக்கப்படுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X