மீண்டும் ஆரம்பிக்கும் அசீம்..தனலட்சுமியுடன் மோதல்..அமைதியிழக்கும் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் அதிகமாக ஆட்டம்போட்டு அதிகமாக வாங்கிக்கட்டிக்கொண்டவர் அசீம்.

அப்பப்ப அமைதியாக இருந்தாலும் அவரால் அவரது இயல்பான நடத்தையை கொண்டுவர முடியவில்லை.

டிவி டிபேட் டாஸ்க்கில் அசீம் தனலட்சுமி மீண்டும் மோதிக்கொண்டார்கள். இருவரும் கத்தி சண்டைப்போடுவதால் பிக்பாஸ் வீடே அமையற்று இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்கில் மோதிக்கொள்வது சகஜம். இதில் அசீம் மீண்டும் தனது சுயரூபத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

அசீம் என்றாலே பரபரப்பு

அசீம் என்றாலே பரபரப்பு

பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும். அதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் வாதம் செய்வார்கள். ஆனால் இந்த வாதத்தை மிக மோசமாக மாற்றி வாடி-போடி, சீய் தூ, என்கிற அளவிற்கு மோசமாக மாற்றியது, பாடி ஷேமிங் செய்தது போன்ற வேலைகளில் ஈடுபட்ட அசீம் கமல்ஹாசனால் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக கண்டிக்கப்பட்டுள்ளார். இது வெளியில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து இரண்டு வாரம் கமலிடம் சிக்கிய அசீம்

தொடர்ந்து இரண்டு வாரம் கமலிடம் சிக்கிய அசீம்

முதல் முறை தான் கண்டிக்கப்பட்டபோது கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டார் அசீம். தனது செயலுக்கு தந்நிலை விளக்கமும் கொடுத்தார். அதை கமல்ஹாசனும் ஏற்றுக் கொண்டார். இனியாவது இப்படி செய்யாதீர்கள் என்று கமல் சொன்னார். ஓரிரு நாட்கள் சும்மா இருந்த அசீம் இந்த வாரம் கடந்த வாரத்தில் செய்ததை விட அதிகமாக செய்து மிகப் பெரிய கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார். இதை அடுத்து கமல்ஹாசன் இதை கண்டிப்பாக கண்டிப்பார் என சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. கமல்ஹாசனும் கடுமையாக கண்டித்து, கிட்டத்தட்ட மட்டம் தட்டும் லெவலில் அசீமை கண்டித்தார். அசீமால் எதுவும் பேச முடியவில்லை அந்த வாரம் நாமினேஷனிலும் அவர் பெயர் அதிக அளவில் நாமினேட் செய்யப்பட்டது.

டீம் மேட்ஸ்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் குதிக்கும் அசீம்

டீம் மேட்ஸ்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் குதிக்கும் அசீம்

அசீம் உடன் ஒட்டி திரிந்த அசல் கோலார் வெளியேற்றப்பட்ட பின் கதறி அழுத அசீம் தான் அமைதியாக இருப்பேன் என்று சக போட்டியாளிடம் தெரிவித்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி அதேபோல் இரண்டு நாட்கள் இருந்தார். ஆனால் நேற்று மீண்டும் அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது. ஒரு குழு மனப்பான்மையுடன் குழுவில் இணைந்து இயங்க அசீமால் முடியாது என்பது நன்றாக தெரிகிறது. குழுவாக ஒரு போட்டி வைத்தால் அதில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும், பேசியே மற்றவர்களை தன் பக்கம் கொண்டுவர வேண்டும் தன் பேச்சுக்கு தான் மற்றவர்கள் அடிபணிய வேண்டும் என்கிற மனநிலையில் செயல்படுகிறார் அசீம். இது மற்ற டீம் மேட்ஸ்களுக்கு பிடிக்கவில்லை. போனவாரம் கமல் கொளுத்தி போட்ட விஷயங்களால் சுயமாக இயங்க வேண்டும் என்று நினைக்கும் தனலட்சுமி உட்பட பலரும் அவருடன் மோதியதை பார்க்க முடிந்தது.

மீண்டும் சுயரூபத்தை காட்டத்தொடங்கும் அசீம்

மீண்டும் சுயரூபத்தை காட்டத்தொடங்கும் அசீம்

நேற்று டிவி டிபெட் டாஸ்க்கில் மீண்டும் இந்த பிரச்சனை வெடித்தது. நடுவர் மகேஸ்வரி சரியாக செயல்படவில்லை என்று அசீம் கேட்க அது ஒரு பிரச்சினையாக மாறியது. நான் எப்படி செயல்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லித் தரக்கூடாது எனக்கு தெரியும் என்று மகேஸ்வரி சொல்ல அப்ப எனக்கு தெரியாதுன்னு சொல்ல வருகிறீர்களா? என்று அசீம் கேட்க வாதம் நீண்டது. பிறகு தனலட்சுமி உடன் வாக்குவாதம் நீண்டது. ஷிவின் வைத்த வாதத்தை மறுத்து பேசுகிறேன் என்று அசீம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அவருக்கும் தனலட்சுமிக்கும் நேற்றிரவு கடுமையான வாதம் நடந்தது. அவ இவன்னு என்னை என்று பேசாதீர்கள் என்று தனலட்சுமி சொல்ல இருவருக்கும் கடுமையாக முட்டிக் கொண்டது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் நிம்மதி இழந்தனர். இந்த வாரமும் அசீம் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் மெல்ல தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கி உள்ளார். அடுத்து வரும் மூன்று நாட்களில் என்னென்ன செய்ய போகிறாரோ? அசீம் பெயர் நாமினேஷனில் வேறு இருக்கிறது. அதனால் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களில் அசீமும் இருப்பாரா என்பது போக போகத்தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X