ஜோஷ் ஆப் உடன் கைகோர்த்த நித்தம் ஒரு வானம் படக்குழு.. அசோக் செல்வன், ரிது வர்மா ஜாலி சாட்!

சென்னை: இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள அழகிய காதல் படமான நித்தம் ஒரு வானம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஓ மை கடவுளே, தீனி என தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அசோக் செல்வன்.

சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜோஷ் ஆப் உடன் படக்குழு கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் ஹாட்ரிக்

அசோக் செல்வன் ஹாட்ரிக்

சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, தீனி என தொடர்ந்து வித்தியாசமான படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு மன்மதலீலை மற்றும் வேழம் என இரு படங்கள் வெளியாகின. இந்நிலையில், மூன்றாவதாக நித்தம் ஒரு வானம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு அசோக் செல்வனும் ஹாட்ரிக் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

மூன்று ஹீரோயின்கள்

மூன்று ஹீரோயின்கள்

அசோக் செல்வனின் இந்த படம் மட்டும் ஹாட்ரிக் அல்ல, படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று பிரபல நடிகைகள் நடித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளையடித்த ரிது வர்மா, சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் படங்களில் நடித்து அசத்திய அபர்ணா பாலமுரளி மற்றும் இளம் நடிகை சிவாத்மிகா என மூன்று ஹீரோயின்கள் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் இந்த படத்தில் உள்ளனர்.

காதல் படம்

காதல் படம்

இந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை எனும் அடல்ட் காமெடி படத்தில் நடித்திருந்த அசோக் செல்வன், வேழம் எனும் சைக்கோ த்ரில்லர் படத்தை அடுத்ததக ரிலீஸ் செய்தார். இந்நிலையில், செம ஜாலியாக ஒரு காதல் படத்தையும் ஒரு இளைஞனின் வாழ்க்கையையும் கண் முன்னே செம கலர்ஃபுல்லாக கொடுக்க நித்தம் ஒரு வானம் எனும் அற்புதமான டைட்டிலில் புதிய படத்தை வரும் நவம்பர் வெளியீடாக கொடுக்க காத்திருக்கிறார், சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜோஷ் உடன் இணைந்து

ஜோஷ் உடன் இணைந்து

நித்தம் ஒரு வானம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரிது வர்மா இணைந்து ஜோஷ் ஆப் கன்டென்ட் கிரியேட்டர்களை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஏகப்பட்ட திறமையாளர்களை ஜோஷ் ஆப் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திறமைக்கு மதிப்பு

திறமைக்கு மதிப்பு

நாயகன் அசோக் செல்வன், நாயகி ரிது வர்மா மற்றும் நித்தம் ஒரு வானம் படக்குழுவினர் ஜோஷ் ஆப் கலைஞர்களுடன் நடத்திய சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. நித்தம் ஒரு வானம் படத்தை பற்றியும் அதில் நடித்த அனுபவங்களையும் அவர்கள் ஷேர் செய்துள்ள நிலையில், அவர்களுடன் இணைந்திருக்க உடனடியாக ஜோஷ் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X