»   »  ரஜினி மகளுடன் விவாகரத்தான ஓராண்டிற்குள் 2வது திருமணம் செய்த அஸ்வின்: வைரல் போட்டோ

ரஜினி மகளுடன் விவாகரத்தான ஓராண்டிற்குள் 2வது திருமணம் செய்த அஸ்வின்: வைரல் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவருக்கு திருமணம்!- வீடியோ

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் அஸ்வினுக்கு 2வது திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், அவரின் காதலர் அஸ்வின் ராம்குமாருக்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

2015ம் ஆண்டு சவுந்தர்யா வேத் என்ற மகனை பெற்றெடுத்தார்.

 பிரிவு

பிரிவு

மகன் பிறந்த சில மாதங்களில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் குடும்பநல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றனர்.

 அப்பா

அப்பா

சவுந்தர்யா அப்பா, அம்மாவுடன் தங்கி பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அஸ்வின் பற்றி புதிய தகவல் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 புகைப்படம்

புகைப்படம்

அஸ்வின் ராம்குமார் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அவர் 2வது மனைவியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

 முயற்சி

முயற்சி

சவுந்தர்யாவையும், அஸ்வினையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அவரின் முயற்சியால் எந்த பலனும் இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Soundarya Rajinikanth's former husband Ashwin Ramkumar has married again. A picture of him with his second wife has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X