»   »  என்னது, நவம்பர் 26ம் தேதி எனக்குக் கல்யாணமா?... இல்லை என்கிறார் அசின்!

என்னது, நவம்பர் 26ம் தேதி எனக்குக் கல்யாணமா?... இல்லை என்கிறார் அசின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அசினுக்கு வருகின்ற நவம்பர் 26இல் திருமணம் என்று செய்திகள் குவிந்து வருகின்ற நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவர். மேலும், தேவையற்ற புரளிச் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும், நடிகை அசினும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

Asin not getting married this year

இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்கள். இந்நிலையில் இருவரும் நவம்பர் 26 அன்று டெல்லியில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை அசின் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர், "என் திருமணத் தேதி பற்றி வருகிற செய்திகள் எல்லாம் வேடிக்கையாக உள்ளன. இந்த வருட இறுதி வரை என்னுடைய படங்களை முடிக்கவேண்டியுள்ளது. அதற்குப் பிறகுதான் திருமணம். எனவே என்னிடமிருந்து அறிவிப்பு வரும் வரை அமைதியாக இருக்கவும்" என்று கூறியுள்ளார்.

அப்டீனானா நவம்பர் 26ம் தேதி யாருக்குப்பா கல்யாணம்?.. அசினோட 'கசின்' யாருக்காச்சும் கல்யாணமா இருக்குமோ!??

English summary
Asin has been making headlines for quite some time now, courtesy her impending wedding with Micromax co-founder, Rahul Sharma. While the couple got engaged earlier this year. It was recently speculated that the two are all set to get hitched on November 26.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil