»   »  உங்க தலைவி ஓவியாவை போனை ஆன் பண்ண சொல்லுங்கப்பா: ட்வீட்டிய இயக்குனர்

உங்க தலைவி ஓவியாவை போனை ஆன் பண்ண சொல்லுங்கப்பா: ட்வீட்டிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்க தலைவியை போனை ஆன் செய்ய சொல்லுங்கப்பா என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஓவியாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் மிக மிக மிக குறைவு. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகையாகிவிட்டார் ஓவியா.

அவருக்கு விழுந்த ஓட்டுகளை பார்த்து அரசியல் தலைவர்களே அதிர்ந்துவிட்டனர்.

படங்கள்

படங்கள்

பிக் பாஸ் மூலம் ஏகப் பிரபலமாகியுள்ள ஓவியாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்துள்ளது. அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் விரும்புகிறார்கள்.

சி.எஸ். அமுதன்

சி.எஸ். அமுதன்

பிற இயக்குனர்களை போன்றே சி.எஸ். அமுதனும் ஓவியாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு அளிக்க விரும்புகிறார். ஓவியா விரும்பினால் தனது தமிழ் படம் 2ல் அவரை நடிக்க வைக்க விரும்புவதாக அமுதன் தெரிவித்தார். அவர் தெரிவித்தபோது ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சொன்னபடி ஓவியாவை உங்களின் தமிழ் படம் 2ல் நடிக்க வைப்பீர்களா? அப்படி பண்ணீங்க படம் நிச்சயம் ரூ. 100 கோடி என்று ரசிகர் ஒருவர் அமுதனிடம் ட்விட்டரில் கேட்டிருந்தார்.

செல்போன்

ஓவியா ரசிகர் கேட்ட கேள்விக்கு அமுதன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்க தலைவியை போன் ஆன் பண்ண சொல்லுங்கப்பா என்று தெரிவித்துள்ளார்.

English summary
Director CS Amudhan has asked Oviya fans to ask their favourite actress to switch on her cellphone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil