2 இஞ்ச் உயரம் அதிகரிக்கப் போய் வலியை வாங்கிய நடிகர்!

By Mayura Akilan

மும்பை: 16 ஆண்டுகளுக்கு முன்பு உயரத்தை அதிகரிப்பதற்காக ஆபரேசன் செய்த நடிகர் ஒருவர் இப்பொழுது சரிவர நடக்க முடியாமல் பாத நோயால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று நுகர்வோர் கமிஷனில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விளம்பரப்படங்களில் நடித்து வந்த மாடல் வினித் மேத்தா என்பவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருந்துள்ளார். இவர் தனது உயரத்தை அதிகரிப்பதற்காக டெல்லியில் வசித்து வந்த ஆர்.கே. சர்மா என்ற மருத்துவரிடம் 1996 ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்.

அதற்கு கன்சல்ட்டிங் பீஸ் ஆயிரம் ரூபாய் கொடுத்து எக்ஸ்ரேவும் எடுத்துள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், நான்கு முதல் ஐந்து இஞ்ச் வரை உயரத்தை அதிகரிக்கலாம் என்றும் அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு சம்மதித்த மேத்தா 1996 ம் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி தன்னுடைய உயரத்தை இரண்டு இஞ்ச் வரை உயர்த்தினார். பின்னர்தான் வினையே ஆரம்பித்தது.

டெல்லிக்கு வந்து மேத்தாவை பார்த்த அவனுடைய அம்மா, உயரம் அதிகரித்தது உனக்குப் பொருத்தமாக இல்லை. திரும்பவும் பழைய நிலைக்கே வந்து விடு என்று கூறவே மீண்டும் அதே மருத்துவரை அணுகி மறு ஆபரேசன் செய்யச் சொல்லியுள்ளார். இதனையடுத்து பழைய நிலைக்கு திரும்பினார்
மேத்தா. ஆனால் அவரால் முன்பு போல இயல்பாக நடமாட முடியவில்லை. சாதாரணமாக நடந்தாலே காலில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையே தனது இந்த நிலைக்கு காரணம் என்று 1997 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தார்.

ஆனால் மருத்துவர் தரப்பிலோ சரியான சிகிச்சை மூலம்தான் ஆபரேசன் செய்யப்பட்டது என்றும் திரும்ப செய்வதற்கு 10,000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு சிகிச்சையுமே வெற்றிகரமானதாகத்தான் முடிந்தது என்றும் மருத்துவர் தரப்பில் கூறப்பட்டது.

இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய நினைத்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு மேக்தாவின் வாழ்க்கை உதாரணமாகிப்போனதுதான் வேதனை.

More from Filmibeat

Read more about: மாடல் model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X