Don't Miss!
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Technology
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தி படத்துக்கு ப்ரோமோஷன் செய்த விக்ரம்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை (செப் 30) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பொன்னியின் செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விக்ரம், இந்தியில் நாளை வெளியாகும் படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
வாரிசு,
துணிவு
படத்துடன்
மோதும்
பிரபாஸின்
'ஆதி
புருஷ்'
ஐமேக்ஸ்-3-D
படம்..அயோத்தியில்
டீசர்
வெளியீடு

இனி ரசிகர்களுக்கு தான் சொந்தம்
ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை (செப் 30) வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் இருந்த படக்குழுவினர், இன்று சென்னையில், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் அனைவருமே "பொன்னியின் செல்வன் இனி ரசிகர்களுக்கு தான் சொந்தம்" என கூறினர்.

இந்தி படத்துக்கு சப்போர்ட் பண்ண விக்ரம்
'பொன்னியின் செல்வன்' செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சியான் விக்ரம், நாளை இந்தியில் வெளியாகும் விக்ரம் வேதா படத்துக்கு சப்போர்ட் செய்து பேசினார். ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி இருவரும் இயக்கியுள்ளனர். விக்ரம் பேசியதாவது "தமிழில் இருந்து இரண்டு படங்கள் நாளை இந்தியில் வெளியாகிறது. புஷ்கர் காயத்ரியும் தமிழில் இருந்து பாலிவுட் சென்றுள்ளனர் அதனால் அவர்களுக்கும் நாம் சப்போர்ட் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற விக்ரம் வேதா
2017ல் தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் எதிரும் புதிருமாக நடித்திருந்த இந்தப் படம், 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி சுமார் 60 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது. விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பும் ஆக்சன் காட்சிகளும் தெறிக்கவிட்டன. இந்தப் படம் இப்போது இந்தியிலும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ளது.

பாலிவுட்டிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்
விஜய் சேதுபதி கேரக்டரில் ஷிருத்திக் ரோஷனும், மாதவன் பாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடித்துள்ள இந்தி விக்ரம் வேதா நாளை வெளியாகிறது. இந்தப் படம் குறித்து பேசியிருந்த ஹிருத்திக் ரோஷன், தமிழில் விஜய் சேதுபதி நடித்த மாதிரியெல்லாம் என்னால் நடிக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில், விக்ரம் வேதா படத்திற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. செய்தியாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோவை பார்த்த முன்னணி சினிமா செய்தியாளர்கள், படத்துக்கு நல்ல ரிவிவ்யூ கொடுத்துள்ளனர். அதனால், விக்ரம் வேதா இந்தி ரீமேக் பாலிவுட்டிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.