அட்ரஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: அதர்வா, பூஜா ஜவ்வேரி, இசக்கி பரத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அட்ரஸ்.
இந்த படத்தை இராஜமோகன் இயக்குகிறார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.

த்ரில்லர் திரைப்படம்
குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய இயக்குனர் இராஜமோகன் தான் இந்த அட்ரஸ் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக த்ரில்லராக இராஜமோகன் இயக்கி வருகிறார்.

அட்ரஸ் இல்லாத ஊர்
1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கின்ற போது தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே சிக்கி கொண்டு தனது 'அட்ரஸை' தொலைத்த ஒரு கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்த படத்தின் கதை.

நல்ல வரவேற்பு
அதர்வா இந்த படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அதர்வாவின் கதாபாத்திரம் புரட்சிகரமான கதாபாத்திரமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படக்குழு அறிவிப்பு
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலை 16ம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. மெரீனா, மூக்குத்திஅம்மன், நெற்றிக்கண் படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











