»   »  தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அதர்வா முரளி..'பாணா காத்தாடி' பத்ரி வெங்கடேஷுக்கு முதல் படம்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அதர்வா முரளி..'பாணா காத்தாடி' பத்ரி வெங்கடேஷுக்கு முதல் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈட்டி வெற்றியால் கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் அதர்வா முரளி.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை பாணா காத்தாடி மூலம் நடிகர் அதர்வாவை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.

Atharvaa Murali began Own Production House

திறமையான அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அதர்வா ஆண்டுக்கு 2 பட்ஜெட் படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்க விருக்கிறார்.

தனது நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்கும் அதர்வா முரளி இந்தப் படத்தில் வாய்ப்பின்றி தவிக்கும் திறமையான கலைஞர்களை தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்ய எண்ணியிருக்கிறார்.

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த அதர்வா முரளிக்கு ஈட்டி மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது.இதனால் உற்சாகமாக தயாரிப்பு நிறுவனத்தில் கால் பதித்திருக்கிறார் அதர்வா.

இவர் தற்போது ருக்குமணி வண்டி வருது, கணிதன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Atharvaa Murali Starts New Production House. He Wrote on Twitter "Super happy and excited about #kiickass Entertainment . It's gonna be a good year ahead. dirbadri".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil