»   »  சில விஷயங்களை சொல்லக் கூடாது, அடக்கி வாசிக்கணும், ஆனால் என்னால முடியல: அட்லீ

சில விஷயங்களை சொல்லக் கூடாது, அடக்கி வாசிக்கணும், ஆனால் என்னால முடியல: அட்லீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனராக பேச வேண்டுமானால் நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாக வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை என்று இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

தெறி படத்தை அடுத்து அட்லீ, விஜய் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசத்த உள்ளார்.

இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய அட்லீ கூறியதாவது,

ரசிகன்

ரசிகன்

இயக்குனராக பேச வேண்டுமானால் நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாக வேண்டும். நான் பேசிக்காகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று தான் சினிமாவுக்கே வந்தேன்.

உணர்ச்சி

உணர்ச்சி

விஜய்யை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அப்படி ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கும்போது அந்த உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது.

இயக்குனர்

இயக்குனர்

சில நேரம் யோசிப்பேன் இயக்குனராக சில விஷயங்களை சொல்லக் கூடாது என்று. ஆனால் தளபதி ரசிகனா பார்த்தால் முடியாது. இந்த படத்தை எப்படா பார்ப்போம் என்ற ஆர்வம் உங்களை போன்று எனக்கும் உள்ளது என்றார் அட்லீ.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இளைய தளபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. அதை பார்க்க தளபதி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

English summary
Director Atlee said that he came to film industry to direct his favourite actor Ilaya Thalapathi Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil