»   »  அட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா?

அட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான். ஆனால்..,

சென்னை: மெர்சல் படத்தை அடுத்து அட்லீ தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த ஹிட் படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை கொடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து மெர்சல் படத்தை எடுத்தார்.

மெர்சல் படம் சூப்பர் ஹிட் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி

தளபதி

தெறி படத்தை அடுத்து இயக்கினால் தல அல்லது தளபதியை தான் இயக்குவேன் என்று அடம் பிடித்தார் அட்லீ. பிடிவாதமாக இருந்து மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுத்தார்.

தெலுங்கு

தெலுங்கு

3வது முறையாக விஜய்யை இயக்கும் ஆசை உள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கிவிட்டு வந்து விஜய்யுடன் பணியாற்றுவார் என்று கூறப்பட்டது.

ஸ்கிரிப்ட்

ஸ்கிரிப்ட்

தெலுங்கு படம் இயக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் அது தற்போது அல்ல. என் அடுத்த படம் தெலுங்கில் இல்லை தமிழில் தான். அந்த பட ஸ்கிரிப்ட் வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று அட்லீ தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அட்லீயின் நான்காவது படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யார் கண்டால் அந்த ஹீரோ விஜய்யாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

English summary
Director Atlee has made it clear that his fourth film is not in Telugu but in tamil. Atlee is busy with the script of his upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X