Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பார்ட்டியில் கைகோர்த்தபடி போஸ்.. அனைவரையும் கவர்ந்த தனுஷ் -சாரா அலிகான் ஜோடி!
மும்பை : நடிகர் தனுஷ் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள ஹாலிவுட் படம் தி க்ரே மேன்.
இந்தப் படம் வெளியாகி தனுஷிற்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதன்மூலம் அவருக்கு மீண்டும் ரூசோ சகோதரர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக இந்தப் படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினருடன் இணைந்து தனுஷ் அமெரிக்கா, மும்பை போன்ற இடங்களில் செய்தார்.
சிம்பு மாதிரி ஆள பாத்த உடனே புடிக்கும்.. என்ன பாக்க பாக்க தான் புடிக்கும்.. ஓப்பனா பேசிய தனுஷ்!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்களை தாண்டி அடுத்ததாக ஹாலிவுட்டிலும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஒரு நடிகரை தமிழ் நடிகராக பார்க்காமல் இந்திய நடிகராக பாருங்கள் என்று பிரமோஷனின்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் தெரிவித்திருந்தார்.

தி க்ரே மேன் படம்
ரூசோ சகோதரர்கள் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு அவரது தி க்ரே மேன் படம் நெட்பிளிக்சில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநர்கள் மட்டுமின்றி படக்குழுவினரும் தனுஷிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

ரூசோ சகோதரர்கள் பாராட்டு
இதனிடையே தனுஷின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் அடுத்த படத்திலும் அவரை தங்களது படத்தில் கமிட் செய்யவுள்ளதாகவும் ரூசோ சகோதரர்கள் கூறியுள்ளனர். இது தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அவர் அடுத்தடுத்த எல்லைகளுக்கு தன்னுடைய நடிப்பை விரிவுப்படுத்தி வருவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்

தயாரிப்பாளர் கொடுத்த பார்ட்டி
இதனிடையே அமெரிக்கா, மும்பை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் பிரமோஷன்கள் முன்னதாக நடத்தப்பட்டன. இதில் மும்பை பிரமோஷனை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி, தி க்ரே மேன் படக்குழுவினர் ரூசோ சகோதரர்கள், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு பார்ட்டி கொடுத்திருந்தார். இதில் பாலிவுட் பிரபலங்கள் சாரா அலிகான், அனன்யா பாண்டே, மலாய்கா அரோரா, நடிகர் ஷாஹித் கபூர், அவரது மனைவி மீரா ராஜ்புட், நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நெருக்கமான போஸ்
பார்ட்டியில் கலந்துக் கொண்டவர்கள் புகைப்படங்களுக்கு தொடர்ந்து போஸ் கொடுத்தனர். புகைப்பட கலைஞர்களும் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தனர். பார்ட்டிக்கு வந்த சாரா அலி கான், தனுஷின் கையை பிடித்தபடி நடந்துவந்து போஸ் கொடுத்தார். இந்த ஜோடி அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

அட்ராங்கி ரே ஜோடி
இவர்கள் இருவரும் இணைந்து முன்னதாக பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்திருந்தனர். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அக்ஷய் குமாரின் காதலியாகவும் தனுஷின் மனைவியாகவும் நடித்திருந்தார் சாரா அலிகான். அந்தப் படத்திலேயே இவர்களது ஜோடி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.